Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொழு கொழு குஷ்பு... எடையை குறைத்தது எப்படி… டிப்ஸ் கேட்ட ரசிகர்கள் !
சென்னை : கொண்டையில் தாழம்பூ... நெஞ்சிலே வாழைப்பூ... கூடையில் என்ன பூ குஷ்பு என்று, 90ஸ்களை ஆட்டம் போடவைத்தவர் குஷ்பு
கன்னம் ரெண்டும் நல்ல உப்பி, பார்ப்பதற்கே ஜீராவில் ஊரிய குலாம் ஜாமுன் மாதிரி சும்மா கும்முனு இருப்பார்.
அப்படி கும்முனு இருந்த குஷ்பு தற்போது 15 கிலோ வரை குறைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மயக்கும் மந்திரம் குரலுக்கு சொந்தக்காரி ஆஷா போஷ்லே…டாப் 5 ஹிட் சாங்!

வருஷம் 16
தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு. ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கியவர் நடிகை குஷ்பு.

ஜாக்பாட்
ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்டு வரும் வித விதமான டிசைன் ஜாக்கெட்டுகள் தான் பெண்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சியை விட அதிகம் பேசப்பட்டது. சினிமா, அரசியல், சின்னத்திரை என அனைத்திலும் சகலகலா வல்லியாக சுற்றிச் சுழன்று வருகிறார்.
Recommended Video

சுந்தர் சியை மணந்தார்
1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டதால் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குஷ்பு தொடர்ந்த நடித்து வருகிறார். சுந்தர்சி மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு டீன் ஏஜ் மகள்கள் உள்ளனர்.

இணையத்தில் ஆக்டிவாக
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் குஷ்பு எப்போதும் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் குஷ்பு தனது இளைய மகள் அனந்திதா கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

உடல்
குஷ்பு சில தினங்களுக்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்த தேகத்தில் இருந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக அனைவரும் பாராட்டினர். நடிகை திரிஷாவும் குஷ்புவின் உருமாறிய அழகான தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

15 கிலோ உடல் எடை குறைந்தது
குஷ்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், தான் 15 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் குஷ்பு மேம் நம்பவே முடியல எப்படி குறைச்சிங்க எங்களுக்கும் டிப்ஸ் சொல்லுங்க என்றும், குஷ்புக்கு அழகே அந்த உப்பிய கன்னம்தான் என்றும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மீண்டும் சின்னத்திரையில்
ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடன இயக்குனர் பிருந்தாவுடன் ஒரு நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்திருந்தார்.