»   »  பழைய ரயில் பெட்டிகளில் குடியிருந்த சிறுமிகளுக்கு மஞ்சு வாரியர் செய்த உதவியை பாருங்க!

பழைய ரயில் பெட்டிகளில் குடியிருந்த சிறுமிகளுக்கு மஞ்சு வாரியர் செய்த உதவியை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பழைய ரயில் பெட்டிகளில் வசித்து வந்த சிறுமிகளுக்கு நடிகை மஞ்சுவாரியர் வீடுகளை கட்டி கொடுத்து உதவியுள்ளார். மேலும் தன்னுடைய நிகழ்ச்சிகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு சிறுமிகளுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளின் புதுமனை புகுவிழாவில் அவர் கலந்துகொண்டார்.

கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா, ஆதிரா என்ற குழந்தைகள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

Actress Manju warrier build a house for the girls who were living in the old train compartment

இவர்கள், ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி இருந்தனர். இந்த விவரம் மஞ்சு வாரியாருக்கு தெரிய வந்தது.

வீடு இல்லாத நிலையிலும் பள்ளிக்கு சென்று படிக்கும் அந்த சிறுமிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார் மஞ்சு. இதற்காக தனது சொந்த செலவில் 5 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி அந்த சிறுமிகளுக்கு மஞ்சுவாரியார் வழங்கினார்.

மேலும் தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு சிறுமிகளுக்கு வழங்கிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை குதூகலிக்க வைத்தார். தனது கணவர் வேறு ஒரு நடிகையை திருமணம் செய்துகொண்டபோது அமைதியாக இருந்து கண்ணியத்தை வெளிப்படுத்திய மஞ்சுவாரியர் தற்போது வீடு இல்லாத சிறுமிகளுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து தனது உதவும் மனதை வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
Actress Manju warrier build a house for the girls who were living in the old train compartment

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil