வாவ் செம... 5 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்!
சென்னை : மலையாளம், தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவரான நடிகை மீரா ஜாஸ்மின் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சண்டைக்கோழியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் நம்மை வசியம் செய்ய வருகிறார். இந்த செய்தியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

90ஸ் ஃபேவரைட் நாயகி
90-ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவர் கேரளத்தைச் மீரா ஜாஸ்மின். இவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'ரன்' படம்தான் அறிமுக தமிழ்ப்படம். இந்தப் படத்தில் இருந்தே ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஹீரோயினாக வலம் வந்தார்.

முன்னணி நடிகர்களுடன்
இதனால், புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து, பரட்டை என்ற அழகுசுந்தரம், சண்டைக்கோழி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய், அஜித், தனுஷ்,மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.

விலகி இருந்தார்
தனது கண்அழகால் ரசிகர்களை வசியம் செய்த மீரா ஜாஸ்மின் கடந்த 5வருடமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் விலகி இருந்தார். இவர் கடைசியாக வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவான இங்க என்ன சொல்லுது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விடிவி கணேஷுக்கு ஜோடியாக நடித்தார்.அதைத் தொடர்ந்து பூமரன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

ரீ என்ட்ரி
இந்நிலையில், நடிகை மீரா ஜாஸ்மீன், இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் உருவாக உள்ள 'மகள்'படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள மீரா ஜாஸ்மின், இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கி உள்ளார். தொடங்கிய முதல் நாளிலேயே 55 ஆயிரம் ரசிகர்களை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











