Nadhiya: இவங்களுக்கு வயசே ஆகாது போல... நதியாவின் வொர்க் அவுட் வீடியோ!
சென்னை: 80ஸ் காலகட்டத்தில் ஹீரோயினாக வலம் வந்த நதியா, தற்போது தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்றாலும், தற்போது வரை தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக அதே அழகுடன் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகை நதியா மலையாள திரைப்படமான ''நோக்கத்த தூரது கண்ணும் நட்டு'' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து, தமிழில் பத்மினியோடு இணைந்து பூவே பூச்சூடவா படத்தில் நடித்தார். அந்த படம் நதியாவிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதன்பின், பூக்களைத்தான் பறிக்காதீர்கள், மந்திர புன்னகை, நிலவே மலரே, பாடு நிலவே, அன்புள்ள அப்பா என அடுத்தடுத்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.

நடிகை நதியா: நதியாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது, அந்த கால கட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல், நதியா மூக்குத்தி என நதியாவின் ஸ்டைலை பெண்கள் பெரிதும் விரும்பினார்கள். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நதியா, 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர். அதன் பின் பல வருடம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நதியா, ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.மலையாள தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அழகான நடிகை: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நதியா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமிம் கணவன், மகள்களுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில், ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள்,உங்களுக்கு 58 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, இளமையின் ரகசியம் இதுதானா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
காரணம் இதுதான்: நடிகை நதியா நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகியதற்கு பின்னால் ஒரு கசப்பான செய்தி இருக்கிறது என தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதாவது, நடிகை நதியாவிற்கு வீரமணி தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தார். இதுபற்றி சினிமாலயா எடிட்டர் எம்.ஜி.வள்ளவனிடம், நதியா புலம்பி இருக்கிறார். இதற்கு அவர் கொடுத்த ஐடியா இனிமேல் இங்கு இருக்காதே வெளிநாடு சென்றுவிடு என்று சொன்னார். நதியா தமிழ் சினிமாவைவிட்டு விலக காரணமே, அயோத்தி குப்பம் வீரமணி தான். தனது கட்டுப்பாட்டிற்குள் நதியாவை இருக்க சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்து வெளிநாடு சென்றுவிட்டார் என தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் நடிகை நதியா பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











