வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டி என்ன பிரயோஜனம்? நீச்சல் குளத்தில் படுத்து யோசிக்கும் பூனம் பஜ்வா!

சென்னை : தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தவறான கதையை தேர்வு செய்து பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடம் பிடித்தவர் பூனம் பஜ்வா.

அழகும் திறமையும் இருந்தும்,சரியான கதைகளை தேர்வு செய்யாததால், தற்போது படவாய்ப்பை பெற படாதபாடுபட்டு வருகிறார்.

தளதளனு இருந்த பூனம் பஜ்வா தற்போது உடம்பை சும்மா கில்லி மாதிரி குறைத்து நீச்சல் குளத்தில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா

2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து கலக்கி வருகிறார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல்

தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிபடங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள பூனம் பஜ்வாய்க்க வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். அரண்மனை மற்றும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

இன்ஸ்டாகிராமில் க்யூட் மற்றும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் நடிகை பூனம் பஜ்வாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தற்போது,பூனம் நீச்சல் குளத்தில் பிகினியில் மொத்த உடலையும் காட்டியபடி மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பூனம் பஜ்வாவின் தீவிர ரசிகர்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியா என்று முகம் சுளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: poonam bajwa glamour photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X