சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்தேன்... ரகசியங்களை பகிர்ந்த பிரபல நடிகை!

சென்னை: தான் சினிமாவுக்கு வந்த புதிதில் பல தவறுகளை செய்ததாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பூரணா,

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூர்ணா. மலையாள மொழி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் பகடை என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் அறிமுகம்

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை பூர்ணா. தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை பூர்ணா.

திருமண மோசடி கும்பல்

திருமண மோசடி கும்பல்

சமீபத்தில் துபாய் நகைக்கடை அதிபர் என கூறி பூர்ணாவை மோசடி கும்பல் ஒன்று திருமணம் செய்து ஏமாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை பூர்ணா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பூர்ணா.

ரசிகர்களின் கருத்துக்கள்

ரசிகர்களின் கருத்துக்கள்

அவர் பேசியிருப்பதாவது, ''பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. நம்மை பற்றி நம்மை வளர்த்துவிட்ட ரசிகர்கள் என்ன கூறினாலும் ஏற்று கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் நேர்மறை கருத்துக்கள் என்றாலும் சரி, எதிர்மறை கருத்துகள் என்றாலும் சரி ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹீரோயினாக மட்டுமே..

ஹீரோயினாக மட்டுமே..

சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என்றுதான் நடிக்க வந்தேன்.

இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன்

இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன்

நடிகைகள் ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன். சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

7 படங்கள் கைவசம்

7 படங்கள் கைவசம்

சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகளை செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக இருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன் என்று கூறியுள்ளார். பூர்ணா தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 7 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழில் விசித்திரம்

தமிழில் விசித்திரம்

அவற்றில் படம் பேசும், பிசாசு 2, அம்மாயி ஆகிய மூன்று தமிழ் படங்களும் பேக் டோர், தெலுகுலோ நாக்கு நச்சானி பதம் பிரேமா என்ற தெலுங்கு படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் விசித்திரம் என்ற தமிழ் படத்திலும், விரிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X