Priyanka Mohan: ஆபாச சித்தரிப்பு படங்கள்.. திருந்தச் சொல்லி நடு ராத்திரியில் பிரியங்கா மோகன் போஸ்ட்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகன் கடந்த சில மாதங்களாகவே இணையதளத்தில் இணையதள விஷமிகளால் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறார். இதற்கு பின்னால் ஒரு முன்னணி நடிகர் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவை எல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகத்தான் உள்ளது. இப்படி இருக்கும்போது நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச சித்தரிப்பு படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இவை ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இதற்கு நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படமான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் டான், பிரதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணையதளத்தில் நடிகை பிரியங்கா மோகன் குறித்த மோசமான தகவல்கள் பரப்பப்பட்டன. அதுவும் பிரியங்கா மோகனுக்கு நடனம் ஆட வராது, நடிக்க வராது என்றும் அவதூறாகவும், அவரது தோற்றம் குறித்து மிகவும் மோசமாக உருவக்கேலி செய்வதைப் போலவும் மோசமாக எல்லாம் பதிவிட்டார்கள்.

Actress Priyanka Mohan X Page Post About AI Created abusive Images About her
Photo Credit:

தொடர்ந்து குடைச்சல்: இந்த பதிவுகளுக்கு பிரியங்கா மோகனோ, நான் என்னிடம் இருக்கும் திறமைகளை வைத்து வாழ்ந்து கொள்வேன் என்று பதிலடி கொடுத்தார். இது இப்படி இருக்க, நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச சித்தரிப்பு படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இவை ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இதற்கு நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

எக்ஸ் போஸ்ட்: அதாவது அவரது பதிவில், " என்னை தவறாக சித்தரித்த சில AI-படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்த போலி படங்களை பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். AI என்பது தவறான பயன்பாட்டுக்கு அல்ல, AI என்பதை ஆக்கப்பூர்வமான படைப்பாற்றலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். நாம் என்ன உருவாக்குகிறோம், இணையத்தில் என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Actress Priyanka Mohan X Page Post About AI Created abusive Images About her
Photo Credit:

பிரியங்கா வேதனை: பிரியங்கா மோகன் இந்த பதிவை நள்ளிரவு 01.08 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே நடிகை பிரியங்கா மோகன் குறித்த தவறான மற்றும் சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு பின்னால் ஒரு பெரிய நடிகர் இருப்பதாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர் தான் இது போல தனது ஆட்களிடம் செய்யச் சொன்னதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இதையெல்லாம் விசாரித்தவர்கள் சொல்வதைக் கேட்டால், ஏதோ அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறு எல்லாம் அவதூறு பரப்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் தன்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை பதிவிட்ட நடிகை

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X