உன் மூஞ்சிய இனி யாராவது பார்ப்பாங்களா?.. விஜய்யை அட்டாக் செய்த ராதிகா?.. இறங்கி அடிச்சிருக்காங்க

சென்னை: நடிகர் விஜய் அண்மையில் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராதிகா தனது எக்ஸ் பக்கத்தில் போட்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்தில் வைத்து அரசியல் செய்கிறார் என்று அவருக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து விமர்சனம் வைத்தனர். இதனையடுத்து அதிரடியாக முடிவு எடுத்த விஜய் 'உங்கள் விஜய் நான் வரேன்' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை அறிவித்தார். வாராவாரம் சனிக்கிழமை மட்டும் இந்த சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கும்படி அந்த பயணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியிலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.

கூட்ட நெரிசலில் பலி: திருச்சியில் தொண்டர்களை சந்தித்த அதற்கு அடுத்த வாரம் கரூர் மற்றும் நாமக்கல்லில் தொண்டர்களை சந்தித்தார். கரூரில் பேசுகையில் கூட்ட நெரிசல் அதிகமாகி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக சார்பில் எம்பிக்கள் குழு ஒன்றும் கரூரில் ஆய்வு செய்துவிட்டு சென்றது.

Actress Radhika has released a video strongly criticizing Vijay Here are details
Photo Credit:

ஆணையம் அமைத்த தமிழ்நாடு அரசு: அதேபோல் தமிழ்நாடு அரசும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைத்திருக்கிறது. அந்த ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த அசம்பாவிதத்திற்கு விஜயின் தாமத வருகையும், கட்சியினரின் அலட்சியமும்தான் மிக மிக முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் அக்கட்சியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காலில் விஜய்?: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கரூர் சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் அங்கு தவெக தலைவர் விஜய் செல்லாதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி இவ்வளவு நடந்த பிறகும் விஜய் இப்படி இருக்கக்கூடாது; இப்படியே இருந்தால் அவருக்கு அரசியல் களத்தில் எதிர்காலமே இருக்காது என்பதுதான் பலரது கருத்து. அதேசமயம் பாதிக்கப்பட்ட மக்களிடம் இன்று விஜய் வீடியோ காலில் பேசியதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ராதிகாவின் ட்வீட்: இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தன் தந்தை எம்.ஆர். ராதா நடித்த ஒரு காட்சியை பகிர்ந்திருக்கிறார். அந்த காட்சியில் எலும்பு கூடை பார்த்து பேசும் ராதா, " வாழ்ந்த வாழ்வென்ன. பங்களா வாசலில் எத்தனை கூர்கா. இந்த படமெடுக்கும் எல்லா தயாரிப்பாள்ர்களிடம்ம் பணத்தை வாங்கி கால்ஷீட் கொடுத்துட்டு கொடைக்கான சீசன்க்கு போய்டுவியே; வாய திறந்து என்ன சொல்வனு இந்த பேப்பர்க்காரங்க க்யூவில் நிற்பாங்களே. உன் கண்ணழகு, கால் அழக வர்ணிக்க எத்த்னை மைனர்கள். நீ கோணலாக கொடுக்கும் போஸை எல்லாம் உயர்ந்த போஸ்னு இந்த ஸ்டில் ஃபோட்டோகிராஃப்ர்கள் எடுத்துட்டே இருப்பாங்களே.

முஞ்சை யாராவது பார்ப்பாங்களா?: நீ நடிக்கிற படத்தைதான் பார்ப்பேனு இந்த புரியாத ஜனங்க இருந்தாங்களே. இப்போ உன் மூஞ்சியை யாரவது பார்ப்பாங்களா?" என கேள்விகள் கேட்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மறைமுகமாக விஜய்யைத்தான் ராதிகா தாக்கியிருக்கிறார் என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X