சினிமாவிற்கு வந்து 20 வருஷமாச்சு.. ரசிகர்களுடன் கொண்டாடிய ரெஜினா கசாண்ட்ரா!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தன் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சினிமாவிற்குள் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ந் தேதி சென்னையில் பிறந்தார். சென்னையிலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர், பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன்பின், பிரசன்னா மற்றும் லைலா நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஹீரோயினாக அழகிய அசுரா திரைப்படத்தில் படத்தில் நடித்தார். அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர், சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Regina Cassandra
Photo Credit:

நடிகை ரெஜினா கசாண்ட்ரா: தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், பஞ்சாமிர்தம், சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, ரோடீன் லவ் ஸ்டோரி, ராஜதந்திரம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து இந்தி, கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் இவர், கடைசியாக அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது, ரெஜினா கசாண்ட்ரா மூக்குத்தி அம்மன் 2, செக்சன் 108 படத்திலும், இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் 'தி வைவ்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

கொண்டாடிய நடிகை: ரெஜினா கசாண்ட்ரா நடித்த காதலில் சொதப்புவது குறும்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ரெஜினா சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ரெஜினாவின் சிறந்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவருக்கு வவாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரெஜினாவும் அதை ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X