Reshma Pasupuleti: மாராப்பை சரியவிட்டு.. இந்த வயதிலும் திணறடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
சென்னை: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். சீரியல், சினிமா என நிற்கக்கூட நேரம் இல்லாமல் சுற்றி வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் இவர், தற்போது புடவையில் இழுக்கும் அழகான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். அதன் பின் நடிப்பில் கவனம் செலுத்தி இவர், 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படமான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ரேஷ்மா நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவரை பற்றித்தான் பேசி இருப்பார்கள். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
ரேஷ்மா பசுபுலேட்டி: இதைத் தொடர்ந்து, தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திக் ராஜ் நடித்த கார்த்திகை தீபம் சீரியலில் , நான்கு பெண்களுக்கு அம்மாவாகவும், கார்த்திக்கிற்கு மாமியாராகவும் நடித்து வருகிறார். இப்படி இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும், ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராமில் புடவையில்,மாராப்பை இறக்கிவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











