ரோஜா நடிப்பை நிறுத்த விஜய்தான் காரணமா?.. தளபதி அப்படி என்ன செஞ்சாரு?.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: நடிகை ரோஜா 90களில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த அவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கி ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடிப்பதை அவர் நிறுத்தியதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் ரோஜா. அப்படத்துக்கு முன்னதாகவே சில தெலுங்கு படங்களில் அவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாதான் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. செம்பருத்தி ஹிட் அவருக்கு வாய்ப்புகளை கொட்டி கொடுக்க ஆரம்பித்தன. அப்படி அவர் ரஜினி, சரத்குமார் என பலருடன் சேர்ந்து நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார்.

தமிழில் டாப்: கிளாமர், ஹோம்லி என எந்த ரோலையும் ஏற்று நடிக்கக்கூடிய திறமையை கொண்டிருந்த அவர் உழைப்பாளி, வீரா என வரிசையாக சூப்பர் ஸ்டாருக்கு நடித்து அவருக்கு ராசியான ஜோடி என்ற பெயரையும் பெற்றார். முக்கியமாக மீனாவுக்கு அடுத்து ரோஜாதான் ரஜினியுடன் கெமிஸ்ரியில் ஒர்க் அவுட் ஆகுபவர் என்றும் ரசிகர்களால் புகழப்பட்டார். தமிழில் எப்படி பிஸியாகவும் டாப் இடத்திலும் இருந்தாரோ அதேபோல் தெலுங்கிலும் மின்னினார்.

Actress Roja Reveals Why She Stopped Playing Mother Roles Vijay s Words Changed Her Decision

இயக்குநருடன் திருமணம்: இதற்கிடையே செம்பருத்தி படத்தில் நடித்தபோதே அதன் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியுடன் காதலில் விழுந்தார். இரண்டு பேரும் நீண்ட வருடங்கள் காதலித்தார்கள். பிறகு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பிலிருந்து ஒதுங்கிய ரோஜாவுக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் வந்தது. அதன்படி ஆந்திர அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

அரசியலிலும் நல்ல பெயர்: ஒரு பெண் அதிலும் நடிகை அரசியலுக்கு சென்றால் அவர் ஏகப்பட்ட அவ பேச்சுக்களை சந்திக்க நேரிடும் என்பதற்கேற்ப ரோஜாவும் பல தடங்கல்களை சந்தித்தார். ஆனால் இயல்பிலேயே போராட்ட குணம் உடைய அவர் அந்தப் பேச்சுக்களை எல்லாம் அடித்து நொறுக்கி தனக்கான இடத்தை கெட்டியாக அரசியலில் பிடித்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் கேரக்டர் ரோல்களையும் ஏற்றார் ரோஜா. காவலன், சகுனி என தொடர்ந்து அந்த கதாபாத்திரங்களில் நடித்த அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ரோஜா பேட்டி: தனியார் யூடியூப் சேனலிடம் பேசிய அவர், "நெஞ்சினிலே படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அப்போது அவர் ரொம்பவே ரிசர்வ்டு டைப்பாகத்தான் இருந்தார். அதற்கு பிறகு காவலன் படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்தேன். அந்த சமயத்தில் விஜய் என்னிடம் 'மேடம் நீங்கள் எனக்கு மாமியாரா நடிக்கிறீர்களா?' சும்மா சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். இதனை என்னால் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்களை இன்னமும் நாங்கள் ஹீரோயினாகத்தான் பார்க்கிறோம் என கூறினார். அப்போதிருந்து இனி அம்மா கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X