சிகப்பு சேலையில் மஹாலட்சுமி போல மின்னும் சாய் பல்லவி... குவியும் லைக்ஸ்!

சென்னை : பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட நடிகை சாய் பல்லவி இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளார்

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தராமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய்பல்லவி சிகப்பு புடவையில் மஹாலட்சுமி போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்க அதற்கு லைக்ஸ் குவிகிறது.

மலர் டீச்சராக

மலர் டீச்சராக

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சாய் பல்லவி 2015ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் மலர் டீச்சராக அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட இவர் மலையாளத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன

ஷ்யாம் சிங்கா ராய்

ஷ்யாம் சிங்கா ராய்

தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். அவ்வகையில் நேரடியாக தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த சாய்பல்லவி வெப்சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ஃபிடா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் குவிகிறது. மிடில் கிளாஸ் அப்பாயி படத்திற்குப் பிறகு நானியுடன் இணைந்து நடித்துள்ள ஷ்யாம் சிங்கா ராய் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது.

போராளியாக

போராளியாக

நிகழ்காலத்தையும் பூர்வஜென்மத்தையும் மையப்படுத்தி வெளியான ஷ்யாம் சிங்கா ராய் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் பிளாஷ்பேக்கில் சுதந்திரப் போராட்டத் தியாகியாக சாய் பல்லவி நடித்த பிரமாதப்படுத்தி உள்ளார். தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கும் சாய் பல்லவி விராட பருவம் என்ற மற்றுமொரு படத்தில் போராளியாக நடித்து வருகிறார்.

சிகப்பு சேலையில் மஹாலட்சுமி போல

சிகப்பு சேலையில் மஹாலட்சுமி போல

மிகச் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய் பல்லவிக்கு பாலிவுட்டிலும் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. நல்ல கதை கிடைத்தால் கட்டாயமாக இந்தி படங்களிலும் நடிக்க தயார் என கூறியுள்ள சாய்பல்லவி மிக விரைவிலேயே இந்தி படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகையாக வலம் வரவேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து நன்றாக நடித்தால் போதும் என்று தனது நடிப்பின் மூலம் இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி இப்பொழுது சிகப்பு சேலையில் பார்ப்பதற்கு மஹாலட்சுமி போல மின்னும் அழகிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X