For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடக்கடவுளே.. சமந்தாவுக்கு இப்படியொரு நோயா..மருத்துவமனையில் இருக்கும் போட்டோவை போட்டு உருக்கம்!

  |

  சென்னை : நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸுடன் தனது உடல்நலம் குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் பல படங்களில் படு பிசியாகி நடித்து வருகிறார்.

  தற்போது அவர் கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் 2 படம், கோலிவுட்டில் 2 படம் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

  விஷாலுடன் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி..விளக்கம் கொடுத்த நடிகை!விஷாலுடன் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி..விளக்கம் கொடுத்த நடிகை!

  சமந்தா திடீர் அமெரிக்கா பயணம்

  சமந்தா திடீர் அமெரிக்கா பயணம்

  யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட சமந்தா, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் பிசியாக நடித்து வந்தார். ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படம் டிசம்பர் மாதம் 23ந் தேதி வெளியாக உள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அமெரிக்கா புறப்பட்டார்.

  அரிய வகை நோய்

  அரிய வகை நோய்

  குஷி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சமந்தா திடீரென அமெரிக்கா ஏன் சென்றார் என தெரியவில்லை. ஆனால், சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சமீப காலமாக சோசியல் மீடியாவில் எந்தவித பதிவுகளையும் போடாமல் அதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவியது.

  சமந்தா உருக்கமான ட்வீட்

  சமந்தா உருக்கமான ட்வீட்

  அந்த செய்தி உண்மை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் ட்ரிப்ஸுடன், முகத்தை காட்டாமல், கைகளால் இதயவடிவத்தை காட்டும் ஒருபுகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், யசோதா ட்ரெய்லருக்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி, உங்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  நோயால் பாதிக்கப்பட்டது உண்மைதான்

  நோயால் பாதிக்கப்பட்டது உண்மைதான்

  வாழ்க்கையில் என் மீது வீசும் முடிவில்லாத பல சவால்களை சமாளிக்கும் பலத்தை எனக்கு அளித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு இதை பகிரலாம் என்று காத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நோய் குணமடைய பல நாட்களாகிவிட்டது.

  இதுவும் கடந்து போகும்

  இதுவும் கடந்து போகும்

  எப்போதும் வலுவான முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் இந்த பாதிப்பை ஏற்றுக்கொண்டு போராடி வருகிறேன். நான் விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். என் வாழ்க்கையில் நல்ல நாட்களும் இருந்தன, கெட்ட நாட்களும் இருந்தன... உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என உணர்ந்தாலும், எப்படியோ அந்த நிமிடம் கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும். ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த உருக்கமான பதிவினை பார்த்த ரசிகர்கள் பலர் மனம் கலக்கி அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  Samantha Ruth Prabhu breaks silence on her health, reveals she has been diagnosed with autoimmune condition Myositis
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X