twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தசைநார் கிழிந்து விட்டது..விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு சம்யுக்தா ஹெக்டே வேதனை!

    |

    சென்னை : கோமாளி மற்றும் மன்மத லீலை படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவர் கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

    பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ஸ்டன்ட் காட்சியின் போது பலத்த காயம்.. கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதிஸ்டன்ட் காட்சியின் போது பலத்த காயம்.. கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதி

    நடிகை சம்யுக்தா ஹெக்டே

    நடிகை சம்யுக்தா ஹெக்டே

    பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் கிரீம் படத்தின் படப்பிடிப்பின் சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கால் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் வீடு திரும்பி உள்ளார்.

    விபத்து வீடியோ

    இந்நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே விபத்து எப்படி ஏற்பட்டது என்ற வீடியோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், நாங்கள் ஒரு சண்டைக் காட்சிக்காக படப்பிடிப்பில் இருந்தோம், நான் எடுப்பதற்கு முன்பு 6 முறை நன்றாக ஒத்திகை பார்த்தேன், நான் ஒரு சிறிய தவறு செய்துவிட்டதால் என் முழங்காலில் காயம்பட்டது. அந்த நொடி என்னால் வலியை தாங்க முடியவில்லை அழதேன்.

    தசைநார் கிழிந்துவிட்டது

    தசைநார் கிழிந்துவிட்டது

    படக்குழுவினர் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, எக்ஸ்ரே எடுத்தோம் எலும்பில் எந்த பிரச்சனையும் இல்லை அனைத்தும் நன்றாக இருப்பதாக மருத்துவர் கூறினார், பின்னர் எம்ஆர்ஐ எடுத்த போது தசைநார் முற்றிலும் கிழிந்திருப்பது தெரிந்தது. நான் 5 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 2 பிசியோதெரபிஸ்டுகளை கலந்தாலோசித்தேன், கால் தானாகவே சரியாகிவிடுமா எனகேட்டேன். தானாக சரியாக வாய்ப்பு இல்லை என்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    அழுதேன்

    அழுதேன்

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் என்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைத்து அழுதேன். நான் கூடிய விரைவில் மீண்டு வருகிறேன். எனது திரைப்படக்குழு, குறிப்பாக எனது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மையிலேயே என்னை மீட்கும், விரைவில் மீண்டு வருவேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Samyuktha Hegde, who was shooting for Kannada film Kreem, sustained a ligament tear while she was performing a stunt during a scene. Samyuktha Hegde posted injury video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X