பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்.. நெருங்கிய நண்பர் மீது மோசடி புகார் அளித்த பிரபல நடிகை!

சென்னை: போதை பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை சஞ்சனா கல்ராணி தனது நண்பர் மீது மோசடி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சஞ்சனா கல்ராணி, ஒரு காதல் செய்வீர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

போதை பொருள் வழக்கில் சிறை

போதை பொருள் வழக்கில் சிறை

தொடர்ந்து கன்னட மொழி படங்களிலும் வாய்ப்பு கிடைக்க பிஸியான நடிகையானார். தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை செய்தது மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சனா கல்ராணி.

கால் டாக்சி டிரைவருடன் பிரச்சனை

கால் டாக்சி டிரைவருடன் பிரச்சனை

பல மாத சிறை வாசத்துக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளி வந்துள்ள சஞ்சனா கல்ராணி, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நண்பரின் பேச்சை நம்பி முதலீடு

நண்பரின் பேச்சை நம்பி முதலீடு

இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தேன்.

பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்கள்

பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்கள்

ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் அவர்கள் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்கள். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.

Recommended Video

கூட்டு குடும்பமாக வாழ்ந்துருக்கோம்|NIKKI GALRANI SPEECH | RAJAVAMSAM AUDIO LAUNCH|FILMIBEAT TAMIL
என் கவுரவத்தை பாதிக்கும் வகையில்

என் கவுரவத்தை பாதிக்கும் வகையில்

என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு சஞ்சனா கல்ராணி தனது புகார் மனுவில் கூறியுள்ளார். நண்பர் மீது சஞ்சனா கல்ராணி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் போடா முண்டம்

தமிழில் போடா முண்டம்

சஞ்சனான கல்ராணி மலையாளத்தில் மோகன் லாலின் நடிப்பில் உருவாகி வரும் ஆராட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இதேபோல் தமிழில் போடா முண்டம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் சஞ்சனா கல்ராணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X