»   »  நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகனுக்கு கேரளாவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன். இவர் நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் தன்மை கொண்டவர்.

Actress Saranya Mohan blessed with a baby boy

இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார். பிறகு இவர் நடித்து வெளிவந்த யாரடி நீ மோகினி, அழகர்சாமி, வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்கள் நடித்து புகழ் பெற்றார்.

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சரண்யா மோகன்அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் ஆலப்புழாவில் நடந்தது. இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன் என்று அவர் கூறினார். அதன்படி நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

English summary
South Indian actress Saranya Mohan was blessed with a baby boy on Wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil