»   »  இப்போ நான் திருந்திட்டேன்.. மனம் திறந்த இலியானா!

இப்போ நான் திருந்திட்டேன்.. மனம் திறந்த இலியானா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவந்த இலியானா, சமீபகாலமாகத் தான் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரையிலான, தன் திரையுலகப் பயணங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இலியானா.

'நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இவற்றில் எனக்கு மனநிறைவைத் தந்த படம் என்றால் 'பர்பி' உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என விரக்தியுடன் பேசியிருக்கிறார் இலியானா.

 Actress says, I am behaved childish before

கதை, அதில் எனக்குள்ள முக்கியத்துவம் போன்ற எதையுமே கேட்காமல் தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்கச் சம்மதித்தேன். இப்போது அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் குழந்தைத்தனமாக நடந்துகொண்டதாகவே தெரிகிறது.

இனிமேல், என் நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டேன். ஒரு படத்தில் நடித்தாலும் நன்றாகப் பெயர் சொல்லக்கூடிய படத்தில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியிருக்கிறார் இலியானா.

English summary
Ileana speaks about her cinema career. 'In those films, it is wrong that I agreed to act without asking for my importance', she says.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil