ஸ்ருதியா இது... அடையாளமே தெரியலையே...ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய டீனேஜ் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
அந்த புகைப்படத்தில் ஸ்ருதியை பார்த்த ரசிகர்கள், ஸ்ருதியா இது என்று கேட்கும் அளவுக்கு அடையாளமே தெரியாதபடி இருக்கிறார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் மலைபோல் குவிந்து வருகின்றன.

முன்னணி நடிகர்களுடன்
உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்ததால் வெற்றி நாயகி என பெயர் எடுத்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி தனது டீனேஜ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், மாடலிங் துறையில் நான் முயற்சித்த போது தனக்கு 17 வயது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 17 வயதில் என் முதல் மாடலிங் கிக், நான் கொஞ்சம் பார்க்கிறேன்.... மற்றும் கொஞ்சம் ... ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. நான் எப்போதும் வேலை செய்வதையும், வளர்வதையும், விரும்பினேன் என்றும், நினைவுகள், ஃப்ளாஷ்பேக் என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பல கமெண்டுகள்
ஸ்ருதியின் மாடலிங் படங்கள் நிறைய லைக்குகளையும் கருத்துகளையும் பெற்றுவருகிறது. ஸ்ருதியின் தீவிர ரசிகர்கள் ஒருவர் டீனேஜில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு ரசிகர் அழகான படங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில இந்த புகைப்படத்தைப் பார்த்து ஸ்ருதியா இது அடையாளமே தெரியாத அளவுக்கு மிகவும் ஒல்லியா இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று வருகிறது.

காதலர் சாந்தனு
நடிகை ஸ்ருதி சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். காதலர் சாந்தனுவுடன் இணைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ருதிஹாசன் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு, ஸ்ருதியின் வயிற்றில் எழுதி பழகிய வீடியோ வைரலானது.

அறிமுகம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி. முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றார் ஸ்ருதி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

காதலில் மூழ்கடித்தார்
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பள்ளிப்பருவ மாணவியாகவும், திருமணமான பருவப்பெண்ணாகவும் எதார்த்தமாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் காதலின் அடுத்த எல்லையை உணர்ந்தும் திரைப்படமாக அமைந்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

லாபம்
விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம், செப்டம்பர் 9ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. மேலும் பிரபாஸூடன் சாலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை தோன்றியிராத ஒரு புதிய கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். இந்த தகவலை அவரது ஒப்பனைக் கலைஞர் அம்ரிதா அண்மையில் கூறியிருந்தார்.

வக்கீல் சாப்
ஸ்ருதிஹாசன் கடைசியாக இயக்குநர் வேணு ஸ்ரீராம் இயக்கிய பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கியது. இப்படத்தில் பவன் கல்யாணின் மனைவியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











