ஸ்வாசிகாவின் கணவர் செம நாட்டி போலயே.. சும்மா வளைச்சு வளைச்சு "இச்" கொடுக்கறாரே.. ரொமாண்டிக் வீடியோ!

சென்னை: நடிகை ஸ்வாசிகா, சமகாலத்தில் தமிழ் சினிமா அடையாளப்படுத்திய மிகவும் முக்கியமான நடிகை. லப்பர் பந்து படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. லப்பர் பந்து படத்திற்கு பின்னர் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது. லப்பர் பந்து படத்திற்கு பின்னர் ஸ்வாசிகாவின் நடவடிக்கைகளை ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஸ்வாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவைப் பார்த்த பலரும் கமெண்ட் செக்‌ஷனை நிரப்பி வருகிறார்கள்.

நடிகை ஸ்வாசிகா தமிழ் திரைப்படத்தில் 2009ஆம் ஆண்டு "வைகை" என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கிராமப் பெண்ணாக நடித்திருந்தார். தனது படிப்பை முடிக்கும் முன்னரே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். இது மட்டும் இல்லாமல், தமிழைக் கடந்து மலையாளத்தில் கடந்த 2010இல் "ஃபிடில்" படத்துடன் அறிமுகமானார். பின்னர் "மைதானம்" (2011), "சாட்டை", "அப்புச்சி கிராமம்", "கோரிப்பாளையம்" போன்ற தமிழ் படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்திருந்தார். மலையாளத்தில் "பிரபுவின்டே மக்கள்" (2011), "வசந்தி" (2021), "குமாரி" (2022), "விவேகானந்தன் விரலானு" (2024), "லப்பர் பந்து" (2024), ரெட்ரோ, மாமன் (2025)போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actress Swaswika Shares Romantic Video With His Husband Prem Jacob Goes Trending
Photo Credit:

லப்பர் பந்து நடிகை: இவருக்கு லப்பர் பந்துக்குப் பின்னர் தான் பெரிய ப்ரேக் கிடைத்தது. இது மட்டும் இல்லாமல், தொடக்கத்தில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மலையாளத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் சக்சஸான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தவர், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான படமான லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ்க்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரமும் அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. அதில் இருந்து நடிகை ஸ்வாசிகாவின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரசிகர்கள் கவனிக்கவும் அது குறித்து கருத்து தெரிவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

Actress Swaswika Shares Romantic Video With His Husband Prem Jacob Goes Trending
Photo Credit:

உதட்டு முத்தம்: அந்த வகையில் நடிகை ஸ்வாசிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " அவர் யோகா செய்து கொண்டு இருக்கையில் அவரது கணவர் பிரேம் ஜேக்கப், ஸ்வாசிகாவுக்கு இன்பத்தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அதாவது அவருக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால் ஸ்வாசிகாவுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஸ்வாசிகாவின் கணவர் செம ரொமாண்டிக்கான ஆள் போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு நடிகை ஸ்வாசிகா, " உங்களைச் சுற்றி உங்கள் கணவர் இருக்கும்போது எக்காரணம் கொண்டும் முகத்திற்கான யோகா செய்யாதீர்கள்" என்று கேப்ஷன் இட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X