»   »  லேடி ஜேம்ஸ் பாண்ட் திரிஷா!

லேடி ஜேம்ஸ் பாண்ட் திரிஷா!

Subscribe to Oneindia Tamil

விஜயசாந்தி ரேஞ்சுக்கு மாறப் போகிறார் திரிஷா. அதாவது அதிரடி ஆக்ஷன் நாயகியாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

காதல் நாயகியாக ஹீரோக்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் திரிஷாவுக்கு சமீபத்தில் ரசிகர் மன்றம் உண்டானது. இதையடுத்து ஹீரோக்களுக்கு போட்டியாக, திரிஷாவின் ரசிக, ரசிகைகளும் கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என அசத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விஜயசாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் நாயகியாக மாறினால் செல்வாக்கு இன்னும் கூடிப் போகும் என திரிஷாவுக்கு அவரது ரசிகர் மன்றங்கள் எடுத்துக் கூறினர். இதையடுத்து திரிஷாவுக்கும் அந்த ஆசை வந்து விட்டதாம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு முன்னணி இயக்குநர் திரிஷாவை சந்தித்து ஒரு கதையைக் கூறினார். அது ஒரு அதிரடி கதை. அந்தக் கதையில் அதிரடி, ஆக்ஷனுக்கு சிறப்பான வாய்ப்புகள். கதையைக் கேட்டு வைத்துக் கொண்ட திரிஷா, சொல்லி அனுப்புவதாக தெரிவித்தாராம்.

இந்த நிலையில்தான், தேடிப் போன ஜாக்கி சான், தேரடித் குறுக்குத் தெருவில் சிக்கிய கதையாக திரிஷாவைத் தேடி சூப்பரான ஒரு கதை வந்து சேர்ந்தது. அந்தக் கதை திரிஷாவுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம்.

படம் முழுக்க வில்லனை லெப்ட் அண்ட் ரைட் லெக்கில் விளாசிக் கொண்டே இருப்பது போன்ற கேரக்டராவும் திரிஷாவுக்கு. படத்தில் இடைவேளை வரை வசனமே இல்லையாம், ஒரே அடிதடி, அமர்க்களம்தானாம்.

இந்தப் படம் இப்போதைக்கு தெலுங்கில் தயாராகப் போகிறது. அப்படியே தமிழிலும் டப் செய்யப்படுமாம். ஆக்ஷன் நாயகியாக நடிப்பதற்காக தனது சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்ளவுள்ளாராம் திரிஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil