ரொம்ப ஹேப்பி.. கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகையானார் த்ரிஷா.. வாழ்த்தும் ரசிகர்கள்!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகம் நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது.
கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகை என்பதில் மிக்க மகிழ்ச்சி என நடிகை த்ரிஷா பதிவிட்டுள்ள ட்விட்டர் போஸ்ட் வைரலாகி வருகிறது.
அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்த நாட்டு குடிமகளை போலவே த்ரிஷா இனி நடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவுக்கு கோல்டன் விசா
நடிகை த்ரிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரப்படுத்தி உள்ளது. அமீரகத்தில் முதலீடு செய்பவர்கள், சினிமா, விளையாட்டு, தொழில்துறை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமீரக அரசு தொடர்ந்து கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது.

முதல் தமிழ் நடிகை
சென்னை பொண்ணான நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ள நிலையில், முதல் முறையாக தமிழ் நடிகைக்கு இந்த விருது கிடைத்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி என நடிகை த்ரிஷா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் நடிகை த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோல்டன் விசாவின் பயன்
அமீரகத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. அமீரகத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் விசாவை வைத்துக் கொண்டு இருக்க முடியாது. ஆனால், கோல்டன் விசாவை பெறுபவர்கள் 10 ஆண்டுகள் வரை அமீரக குடியுரிமையை பெற்று இருக்க முடியும் என்பது தான் இந்த விசாவின் பயன்.

மலையாள நடிகர்களுக்கு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி மற்றும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் உள்ளிட்ட மலையாள நடிகர்களுக்கு சமீபத்தில் ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரப்படுத்தி இருந்தது. இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு தற்போது அந்த கவுரவம் கிடைத்துள்ளது.

இளம் நடிகை
மலையாள நடிகர்களை தொடர்ந்து இளம் நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவுக்கு சமீபத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தந்து அதனை மேம்படுத்தும் விதமாக செயல்படுவார்கள் என்கிற நோக்கத்திலேயே இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.

குந்தவையாக
நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பல படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











