Trisha: த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரியைப் பார்த்தீங்களா.. ஒரே லொள்ளா இருக்கேப்பா!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று அதாவது, ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற போதே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறத்தைப் போன்ற கொடி எமோஜியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது மாநாடு நடைபெற்று உள்ளதால், த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன ஸ்டோரி வைத்துள்ளார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்ததால், பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அடிக்கடி செக் செய்து வந்தார்கள். ஆனால், த்ரிஷாவோ, உங்க ஆட்டத்துக்கே நான் வரலை என்பது போல தனது வழக்கமான ஆக்டிவிட்டிகளை ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்த வதந்திகள் என்பது திரைத்துறையில் அவ்வப்போது இருப்பதுதான். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவருக்கு இடையிலும் நட்பைக் கடந்து ஒரு உறவு இருப்பதாகவும் என்று எல்லாம் பலரும் நேரடியாகவே விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகை த்ரிஷா முன்னர் வளர்த்து வந்த செல்லப் பிராணி இறந்த பின்னர், தற்போது அவர் வளர்த்து வரும் செல்லப் பிராணியை நடிகர் விஜய் தான் வாங்கிக் கொடுத்தார் என்றும் கூட விமர்சிக்கிறார்கள்.

த்ரிஷா - விஜய்: இந்த விமர்சனங்களுக்கு தீனி போடுவது போல அதாவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சையை அதிகப்படுத்தி வருகிறார். அதுவும் விஜய் பிறந்த நாள் வந்துவிட்டால் போதும், நடிகை த்ரிஷா எப்போது வாழ்த்துச் சொல்லுவார், விஜய்யை எப்போது அட்டாக் செய்யலாம் என்ற மனநிலையிலேயே ஒரு குரூப் உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் பிறந்த நாளின் பின்னிரவில் வாழ்த்துவது, பிறந்தநாள் முடிந்து, மறுநாள் வாழ்த்துவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் த்ரிஷா. இதனை பலரும் தனது நண்பருக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் வாழ்த்து சொல்லுவார் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை மற்றும் அக்கறை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
த்ரிஷா இன்ஸ்டா ஸ்டோரி: இந்நிலையில் இரண்டாவது மாநாடு குறித்து த்ரிஷா ஏதாவது மறைமுகமாக பதிவிட்டுப்பாரா என பார்த்த இணையவாசிகளுக்கு தனது செல்லப்பிராணி, நாய்கள் குரைக்கும் வீடியோவைப் பார்த்து குரைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவப் பார்த்த இணையவாசிகளோ, த்ரிஷாவுக்கு லொள்ளு தான் போங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள். கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடல் இணையத்தில் நீண்ட காலம் டிரெண்டிங்கில் இருந்தது.
மாநாடு ஏற்பாடு: இந்நிலையில் நேற்று, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் பேசியதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், ஏற்பாடாக, முதல் மாநாட்டை விட இரண்டாவது மாநாட்டின் ஏற்பாடுகள் உண்மையிலே மிகச் சிறப்பு. தொண்டர்களுக்கு குடிநீர் வசதியில் இருந்து, மருத்துவ வசதி வரை பலவற்றையும் பாராட்டும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Click it and Unblock the Notifications











