Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிரின்ட் அவுட் இல்லன்னு இப்படியா? தாய்லாந்து ஏர்போர்ட்டில் 4 மணிநேரம் காக்க வைக்கப்பட்ட வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தாய்லாந்து விமான நிலையத்தில் 4 மணிநேரம் காக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார் வனிதா. ஆனால் அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
காத்துவாக்குல
ரெண்டு
காதல்
டிஜிட்டல்
உரிமை
இத்தனை
கோடியா!

பல்வேறு சர்ச்சைகள்
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதிலும் பிரச்சனை ஏற்பட தற்போது சிங்கிள் மதராக இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸ் கொண்டாட்டம்
இதன் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசன் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார். தொடர்ந்து கலக்கப்போவது யாரு? பிக்பாஸ் கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

காக்க வைக்கப்பட்ட வனிதா
சின்னத்திரையில் பிஸியாக வலம் வந்த வனிதா விஜயகுமாருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. இதன்மூலம் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் வனிதா. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தாய்லாந்து விமான நிலையத்தில் 3 மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

4 மணி நேரத்திற்கு மேலாக
தனது நண்பர் ஒருவரை சந்திக்க தாய்லாந்து சென்றுள்ளார் வனிதா விஜயகுமார். தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் நடிகை வனிதா விஜயகுமாரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளார் வனிதா.

இலங்கை ஏர்லைன்ஸ் அதிகாரிகள்
அதன்பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனிதாவை அதிகாரிகள் தாய்லாந்துக்குள் செல்ல அனுமதிள்ளனர் அதிகாரிகள். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அவர் தெரிவித்திருப்பதாவது, இலங்கை ஏர்லைன்ஸ் அதிகாரிகளின் வேலைதான் இது. அவர்களுடைய தேவையில்லாத செயலால் நான் தாய்லாந்து விமான நிலையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டேன்.

பிரிண்ட் அவுட் இல்லாததால்
தாய்லாந்து நாட்டில் இந்தியர்களுக்கு visa on arrival வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக நாம் தாய்லாந்து பாஸ் மட்டும் எடுக்க வேண்டும். அந்த பாஸ் என்னுடைய மொபைலில் இருந்தது. அதனுடைய பிரிண்ட் அவுட் என்னிடம் இல்லை. அந்த நகலை கொடுக்க வேண்டும் என்று மூன்று மணிநேரத்திற்கும் மேலாக என்னை காக்க வைத்தனர்.
விமான நிலையத்தில் ஒரு பிரின்ட்டர் கூட இல்லை.

போராட்டத்திற்கு பின் அனுமதி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ரொம்ப முரட்டுத்தனமாகவும் நியாயமே இல்லாமலும் நடந்து கொண்டார். அந்த மேனேஜர் என்னை மீண்டும் இந்தியாவிற்கு சென்று பாஸ் பிரிண்ட் அவுட்டை எடுத்து வருமாறு கூறினார். நான் விட்டுக்கொடுக்காமல் 4 மணி நேரம் எனது வழியில் போராட்டம் நடத்திய பிறகு என்னை அனுமதித்தனர்.

தாய்லாந்தில் நுழைந்துவிட்டேன்
வெற்றிகரமாக தாய்லாந்தில் நுழைந்துவிட்டேன்.. குடியுரிமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஏர்போர்ட் பயணிகள் சேவை அதிகாரிகளின் ஆதரவுக்கும் அவர்களின் மனிதாபிமானத்திற்கும் நன்றி.. இவ்வாறு நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை வனிதா பாஸ் பிரிண்ட் அவுட் இல்லாததால் விமான நிலையத்தில் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.