»   »  பானுப்பிரியா தம்பியை மணக்கும் விந்தியா!

பானுப்பிரியா தம்பியை மணக்கும் விந்தியா!

Subscribe to Oneindia Tamil
Vindhya
நடிகை விந்தியாவுக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

இவர்களது கல்யாணம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.

மெல்லப் பேசுங்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது தம்பி கோபி என்கிற கோபாலகிருஷ்ணன். இவர் வாக்குமூலம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கோபிக்கும், நடிகை விந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல, இரு வீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்த திருமணமாம்.

விந்தியா சங்கமம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டமும் போட்டார்.

தற்போது அழகு நிலையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த விந்தியா, கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் இவருக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கோபி- விந்தியா திருமணம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி 16ம் தேதி நடக்கிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் வரவேற்பு நடத்த தீர்மானித்துள்ளனராம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகளை விந்தியாவின் தந்தை யோகானந்த், பானுப்பிரியா, அவரது தங்கையும் முன்னாள் நடிகையுமான சாந்தி பிரியா (நிஷாந்தி) உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil