ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் "நாக பைரவா "

சென்னை : ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ள பான் இந்தியா படமான பாம்பாட்டம் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

Actress Zareen khan to play dual role in tamil movie

இதைத் தொடர்ந்து தற்போது வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும்" நாக பைரவா " படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்கிறார் வி.பழனிவேல்.இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் நடிகையான ஜெரின் கான், பெரும்பாலும் பாலிவுட் படங்களிலேயே நடித்துள்ளார். இது தவிர பஞ்சாபி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர்.

2021 ம் ஆண்டிற்கு பிறகு சரியாக படங்களில் நடிக்காமல் இருந்த ஜெரின் கான், பிக்பாஸ் பிரபலம் ஷிவாஷிஷ் மிஸ்ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இது பற்றி பேட்டி ஒன்றில் ஜெரின் கானிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட போது, டேட்டிங்கோ இல்லையோ. நாங்கள் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது என்றார்.

இருவரும் இணைந்து இருக்கும் போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ஜெரின் கான். ஷிவாஷிஷ் மிஸ்ராவின் குழந்தை தனம் தான் தனக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜெரின், ஷிவாஷிஷ் மிஸ்ராவை பயங்கரமாக புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் இவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் பாலிவுட்டில் அதிகரித்து வருகின்றன.

ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் பிரபலமான நடிகையாகும் எண்ணத்துடன் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும் ஹீரோயினாக, இரட்டை வேடத்தில். தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகளின் வரத்தும், பாலிவுட் நடிகைகளின் வரத்தும் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

ஹீரோக்கள் மட்டுமே அதிகம் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நிலையில், ஜெரின் கான் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்பதால் படம் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X