»   »  நடிகை மருமகள் ஆகலாம், ஆனால் மருமகள் நடிக்கக் கூடாதா?: என்ன கொடுமை சார் இது

நடிகை மருமகள் ஆகலாம், ஆனால் மருமகள் நடிக்கக் கூடாதா?: என்ன கொடுமை சார் இது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நடிகையை மருமகளாக ஏற்கும் குடும்பத்தினர் அவர் தொடர்ந்து நடித்தால் நிராகரிப்பது தொடர்கதையாகிவிட்டது.

இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். நம்பிக்கையும் நேர்மையும் இல்லாமல் போனதால் பிரிவதாக விஜய் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அமலா தொடர்ந்து நடிப்பதால் அவரை பிரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

நடிகை

நடிகை

அமலா திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று கன்டிஷன் போட்டார் விஜய். ஆனால் அதை அமலா மீறிவிட்டார் என்று கூறப்பட்டது. ஒரு நடிகர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரலாம். ஆனால் 21வது நூற்றாண்டிலும் ஒரு நடிகை திருமணத்திற்கு பிறகு தனக்கு பிடித்ததை செய்ய முடியவில்லை.

சரி சமம்

சரி சமம்

ஆணுக்கு பெண் சரி சமம் என்று கூறுவது எல்லாம் வெறும் வாய் வார்த்தை தான். அதிலும் நடிகை என்று வந்துவிட்டால் திருமணமானால் அவரது இனிஷியல் மட்டும் அல்ல தலையெழுத்தும் சேர்ந்து மாறிவிடுகிறது.

சூர்யா-ஜோதிகா

சூர்யா-ஜோதிகா

அமலா பால் மட்டும் அல்ல பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தாரை திருப்தி படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகாவுக்கு தொடர்ந்து நடிக்க ஆசை இருந்தபோதிலும் அவரது மாமனாருக்கு அது பிடிக்கவில்லை என்பதால் அவர் நடிக்காமல் இருந்தார் என்று செய்தி மேல் செய்தி வெளியானது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராயின் கணவர் குடும்பத்தில் அனைவரும் திரைத்துறையில் உள்ளனர். அப்படி இருந்துமே அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முத்தக் காட்சிகள், ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஐஸுக்கு தடா போடப்பட்டுள்ளதாம்.

ஆசையாவது?

ஆசையாவது?

கழுத்தில் தாலி ஏறிய பிறகு ஒரு நடிகைக்கு தொடர்ந்து நடிக்க ஆசை இருந்தாலும் அவரால் அதை செய்ய முடியாத நிலை உள்ளது. கணவர் குடும்பத்தாரை எதிர்த்து நடித்தால் விவாகரத்து தான் மிச்சம்.

விதிவிலக்கு

விதிவிலக்கு

திருமணமான பிறகும் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் பிரச்சனை இன்றி நடித்து வருபவர் ராதிகா ஆப்தே தான். சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் கூட நடித்துள்ளார். அவர் மட்டுமே விதிவிலக்காக உள்ளார்.

ஸ்ரீதேவி, நதியா

ஸ்ரீதேவி, நதியா

மாதுரி தீக்சித், ஸ்ரீதேவி, நதியா, மஞ்சு வாரியர் என பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய் அதன் பிறகே திரும்பி வந்தனர். திருமணமானால் ஏன் நடிகைகள் வெள்ளித்திரையில் இருந்து மாயமாகிவிடுகிறார்கள்.

English summary
While families are ready to accept an actress as a daughter-in-law, they are not happy to see her on screen after wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil