அவரா இது... ஷங்கர் மகளை பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்
ஐதராபாத் : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியவர் டைரக்டர் ஷங்கர். பெரிய நடிகர்களை வைத்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர், தற்போதும் மெகா ப்ரொஜக்ட்கள் பலவற்றை கையில் வைத்துள்ளார்.
ராம் சரண் தேஜாவை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வரும் ஷங்கர், இந்த படத்தை முடித்த பிறகு பாதியில் நிற்கும், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். அதைத் தொடர்ந்து ரன்வீர் சிங்கை வைத்து தமிழில் பிளாக்பஸ்டர் படமான அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க போகிறார்.

மீண்டும் நடிக்கும் ஷங்கர்
சமீபத்தில் ஆர்சி 15 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் ராம் சரணுடன் ஷங்கரும் நடந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்சி 15 படத்தின் மூலம் ஷங்கர் மீண்டும் நடிக்க வருகிறார் என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஷங்கர் இந்த படத்தில் நடிக்கிறாரா, என்ன ரோல், கெஸ்ட் ரோலா அல்லது வெறும் பரபரப்பிற்காக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டதா என தெரியவில்லை.

கார்த்திக்கு ஜோடியாகும் அதிதி
அதே சமயம் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யா தயாரிப்பில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் விருமன் படத்தில் தான், கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து ரஜினியை சந்தித்தும் அதிதி ஆசி பெற்றார்.

பாவாடை தாவணியில் அதிதி
பாவாடை தாவணியில் அழகாக, அடக்கமாக இருக்கும் அதிதி ஷங்கரின் ஃபோட்டோவுடன் விருமன் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஷங்கர் மகள் ஹீரோயினாக அறிமுகமாகும் விருமன் என்ற அறிவிப்புடன் இந்த போஸ்டர் வெளியானது. இது அனைவரையும் மிகவும் கவர்ந்தது. ஏராளமான லைக்குகளை இந்த போஸ்டர் அள்ளியது.

ரேம்ப் வாக்கில் அசத்திய அதிதி
தற்போது விருமன் போஸ்டரில் பார்த்ததற்கு நேர் மாறாக, கருப்பு நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் அதிதி அசத்தலாக ரேம்ப் வாக் போட்டு நடந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது. அவரா இவர் என பார்ப்பவர்கள் அனைவரும் அசந்து வாயை பிளந்து வருகின்றனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பயங்கரமாக புகழ்ந்து வருகின்றனர்.

வியந்த பிரபலங்கள்
ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங், ராம் சரண் தேஜா, ஜெயராம், ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த போது தான், ரேம்ப் வாக் போட்டு அசத்தலாக நடந்து வந்துள்ளார் அதிதி. விருமன் போஸ்டர் லுக் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு இந்த அல்ட்ரா மார்டன் உடையும் கவர்ந்துள்ளது.

செம வைரல் வீடியோ
அதிதி ஷங்கரின் ரேம்ப் வாக் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. முதல் படத்தில் நடிக்க துவங்குவதற்கு முன்பே பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து விட்டாரே அதிதி என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











