விவாகரத்திற்கு பின் வேற லெவல் பாப்புலர் ஆன சமந்தா... என்ன காரணம் தெரியுமா ?

சென்னை : தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் சமந்தா. தனி பிராண்டாகவே உருவெடுத்துள்ளார் என்று கூட சொல்லலாம்.

கடந்த 6 மாதங்களாகவே சமந்தாவின் செய்தி வராத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பாப்புலராகி விட்டார் சமந்தா. 34 வயதாகும் சமந்தா சமீபத்தில் தான், தான் திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். இதற்கு அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.

கவனத்தை ஈர்த்த சமந்தா

கவனத்தை ஈர்த்த சமந்தா

ஆனால் இந்த 12 ஆண்டுகளில் கிடைத்ததை விட கடந்த 6 மாதங்களில் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்த நடிகை என்றால் அது சமந்தா தான். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஓ மாய சீசாவே படத்தில் சேர்ந்து நடிக்கும் போது நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு 2017 ல் திருமணமும் செய்து கொண்டனர்.

தனி பிராண்ட் ஆகும் சமந்தா

தனி பிராண்ட் ஆகும் சமந்தா

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இருவரும் அறிவித்தனர். விவாகரத்தை அறிவித்த பிறகு, விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என வதந்திகள் பரவின. இதை எதிர்த்து கோர்ட் வரை சென்றார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.

சமந்தானாலே டிரெண்டிங் தான்

சமந்தானாலே டிரெண்டிங் தான்

தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா, காத்து வாக்குல ரெண்டு காதல் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 படத்திற்கு பிறகு இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. தெலுங்கில் அடுத்ததாக சாகுந்தலம் படம் இவர் நடிப்பில் வெளிவர உள்ளது. படங்களில் மட்டுமல்ல விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார் சமந்தா. சோஷியல் மீடியாவில் சமந்தா போடும் ஒவ்வொரு போஸ்ட்டும், அவர் என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகி வருகிறது.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
அட இது கூட

அட இது கூட

சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அங்கு வைத்திருந்த வடையை எடுக்க முயற்சிப்பது போல் விளையாட்டு காட்டும் வீடியோவும் செம டிரெண்ட் ஆகி வருகிறது. விவாகரத்திற்கு பிறகு அதிக கவர்ச்சி காட்டுவது, நிறைய படங்களில் நடிப்பது என தான் செய்யும் ஒவ்வொன்றிலும் கவனத்தை ஈர்த்து வருவதால் சமந்தாவிற்கு இருக்கும் மவுசு கூடிக் கொண்டே போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X