»   »  மீடியாவை பார்த்து பார்த்து ஆராத்யாவுக்கு பழகிடுச்சு: ஐஸ்வர்யா ராய்

மீடியாவை பார்த்து பார்த்து ஆராத்யாவுக்கு பழகிடுச்சு: ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: மீடியாக்களை பார்த்து பார்த்து ஆராத்யாவுக்கு பழகிவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா பிறந்ததில் இருந்து மீடியாக்களின் பார்வையில் உள்ளார். பச்சன் குடும்பத்தினர் ஆராத்யாவை மீடியாக்களின் கண்களில் படமால் வைத்தபோதிலும் அவரின் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் பற்றி கூறுகையில்,

ஆராத்யா

ஆராத்யா

ஒவ்வொரு முறையும் நானும், ஆராத்யாவும் வீடு அல்லது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் மக்கள் கூட்டம் நிற்கும், திரும்பும் பக்கம் எல்லாம் கேமராவாக இருக்கும். இது இப்படித் தான் இருக்கும் என்று ஆராத்யா நம்புகிறாள்.

தாய்

தாய்

திரும்பும் பக்கம் எல்லாம் ரசிகர் கூட்டம், கேமராக்கள், மீடியாவை பார்த்து பார்த்து ஆராத்யாவுக்கு பழகிவிட்டது. அது அவளுக்கு தற்போது சர்வசாதாரணமாக உள்ளது. ஒரு தாயாக நான் அவளுக்கு பாதுகாப்பாக உள்ளேன்.

மீடியா

மீடியா

மீடியாக்களுக்கு புகைப்படங்கள், செய்திகள் தேவை. அதனால் நான் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன். இது எந்த ஒரு தாயும் செய்வது தான். ஆனால் அவளுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை.

தாய்மை

தாய்மை

தாய்மை என் சினிமா வாழ்க்கையை மாற்றிவிடவில்லை. நான் எப்பொழுதுமே வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றார் ஐஸ்வர்யா.

கேன்ஸ்

கேன்ஸ்

ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் அழகு, அழகான ஆடைகளில் அசத்திக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

English summary
Aishwarya Rai told that her daughter Aaradhya has got used to paparazzi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil