»   »  காதல்: கோபத்தில் வானுக்கும், பூமிக்குமாக குதித்த 'ஆங்ரி பேர்ட்' ஆலியா பட்

காதல்: கோபத்தில் வானுக்கும், பூமிக்குமாக குதித்த 'ஆங்ரி பேர்ட்' ஆலியா பட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்திரிகையாளர்க் சந்திப்பில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கோபத்தில் கொந்தளித்துவிட்டார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருவதாக இந்தி திரையுலகில் பல காலமாகவே பேசப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

இருப்பினும் இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவார்கள்.

ஊடல்

ஊடல்

ஆலியாவும், சித்தார்த்தும் தங்களின் காதலை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பாலிவுட் அவர்களை காதலர்களாகவே பார்க்கிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி ஊடல் ஏற்பட்டு அது ஊடகம் வரை வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ட்டி

பார்ட்டி

ஆலியா ஒரு பார்ட்டி கொடுத்து அதில் தனது காதலை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப் போகிறார் என்று செய்தி வந்தது. செய்தியை பார்த்த ஆலியா இது உண்மை இல்லை என்று கூறியதுடன் கோபத்தில் கொந்தளித்துவிட்டார்.

ஆலியா

ஆலியா

செய்தியாளர்களை சந்தித்த ஆலியா கூறுகையில், சித்தார்த் ஒன்றும் இங்கிலாந்தில் இருந்து தற்போது மும்பைக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் நான் ஏன் பார்ட்டி கொடுத்து அவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று பொங்கினார்.

சித்தார்த்

சித்தார்த்

சித்தார்த்தை அறிமுகம் செய்து வைக்க நான் ஒருபோதும் பார்ட்டி கொடுக்க மாட்டேன். பார்ட்டிகள் கொடுப்பதில் நான் சொதப்பிவிடுவேன். சித்தார்த் என்ன புதுவரவா, பெருமையாக அனைவருக்கும் காண்பிக்க என்று செய்தியாளர்கள் மீது பாய்ந்துவிட்டார் ஆலியா.

English summary
Alia Bhatt rubbished the news that she is throwing a party to introduce her boyfriend Siddharth Malhotra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil