»   »  பட்டாசால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை

பட்டாசால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிக் ஸ்டார் என்டெர்டையின்மென்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெடித்த பட்டாசுகள் நடிகை அலியாபட்டை பதம்பார்த்து அவருக்கு லேசான காயங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

கடந்த ஞாயிறன்று பிக் ஸ்டார் என்டெர்டையின்மென்ட் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அலியா பட்டின் நடனமும் இடம் பெற்றிருந்தது.

Alia Bhatt suffers burns at Big Star Entertainment Awards

இந்த விழாவில் அலியா பட் மேடையேறிய போது அந்த இடத்தை வண்ணமயமாக மாற்றும் வகையில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. இதில் ஒரு பட்டாசு திடீரென்று பறந்து வந்து அலியாவின் மேல் விழுந்தது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் போது அலியா தனது முகத்தை வலது கையால் மூடிக் கொண்டார். இதனால் அவரின் முழங்கை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அவசரமாக அவரது வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அலியா தனது ட்விட்டர் பக்கத்தில் "வாழ்க்கையில் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியாது எனினும் இதுபோன்ற விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

மொத்தத்தில் என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்து இருக்கிறார்.

தற்போது அலியா பட்டின் தீவிர ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.

English summary
Alia Bhatt suffers burns while performing atBig Star Entertainment Awards. Now She Wrote on Twitter "It isn't possible to go through life accident-free. But, most accidents- like this one - are preventable... FYI my face is fine".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil