»   »  25வது பிறந்தநாளை பாலி தீவில் ஜமாய்த்த அமலா பால்: வீடியோ இதோ

25வது பிறந்தநாளை பாலி தீவில் ஜமாய்த்த அமலா பால்: வீடியோ இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலா பால் தனது 25வது பிறந்தநாளை இந்தோனேசியாவில் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் தனது தோழிகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவரது மாமனார் அழகப்பனை பகைத்துக் கொள்ள விரும்பாத தயாரிப்பாளர்கள் அமலாவை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது.

Amala Paul celebrates birthday in Bali

இந்நிலையில் அமலா பால் கடந்த 26ம் தேதி தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை அவர் இந்தோனேசியாவின் பாலி தீவில் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

பாலி தீவில் உள்ள அயுங் ஆற்றில் ஊஞ்சலாடி நீரில் குதித்து விளையாடியுள்ளார். இதை அவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமலா இயற்கையை ரசித்து வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பது வீடியோவில் இருந்து தெரிவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Actress Amala Paul has celebrated her 25th birthday in Bali on october 26th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil