மாலத்தீவில் மஜா பண்ணும் அமலா பால்.. பீச்சில் பிகினி உடையில் என்னம்மா காத்துவாங்குறாரு!
சென்னை: சம்மர் முடிந்தும் இன்னமும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நடிகைகள் எல்லாரும் மீண்டும் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
நடிகைகள் ஸ்ரேயா, பிரணிதா எல்லாரும் குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் நிலையில், நடிகை அமலா பால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே கடற்கரை அருகே வித்தியாசமான பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

மாலத்தீவில் அமலா பால்
நடிகை அமலா பால் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கே கவர்ச்சி பொங்க பிகினி உடையை அணிந்து கொண்டு பீச்சில் அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

ஆடை சர்ச்சை
ஆடை படத்தில் முழு நிர்வாணமாக காமினி கதாபாத்திரத்தில் நடித்த அமலா பாலுக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட மறைமுக எதிர்ப்புகள் வெளியாகி இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுங்கி செல்லும் நிலை உருவானது. ஆனால், அந்த போராட்டங்களை எல்லாம் மீறி மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் அமலா பால்.

கைகொடுத்த கடாவர்
நடிகை அமலா பால் சொந்த தயாரிப்பில் உருவான கடாவர் திரைப்படம் ஒரு வழியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. அமலா பால், அதுல்யா ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்த அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை ஓடிடியில் கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

ஜாமினில் விடுதலை
நடிகை அமலா பாலுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என அவரது நண்பர் பவ்நிந்தர் சிங் என்பவரை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். இருவருக்கும் இடையே இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், அனுமதியின்றி அந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சனையாக மாறியது என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வதந்திகள்
ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமலா பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், இப்போதைக்கு அமலா பால் மாலத்தீவில் தனது விடுமுறையை ஜாலியாக கொண்டாடி வருகிறார் என்பது மட்டுமே தெளிவாகி இருக்கிறது.

கடற்கரை மருத்துவம்
தனக்கு ஏற்பட்ட மனக் காயங்களை ஆற்ற மாலத்தீவு கடற்கரை தான் நல்ல மருத்துவத்தை தருகிறது என நடிகை அமலா பால் பதிவிட்டுள்ள கேப்ஷனும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒயிட் டாப்ஸ் அணிந்து கொண்டு உள்ளாடையுடன் அவர் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை போட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











