»   »  மீண்டும் முழு வீச்சில் களமிறங்கும் அமலா பால்!

மீண்டும் முழு வீச்சில் களமிறங்கும் அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக பிரபல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளும் முன் வெளியாகும் அவர்களின் படங்கள் தோல்வியைத் தழுவுவது வழக்கம்.

ஆனால் அமலா பால் விதிவிலக்கு. தனுஷ் ஜோடியாக அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ரிலீசாகும்போதுதான் அவரது திருமணம் நடந்தது.

அடடா, பிரமாதமாக நடித்திருக்கிறார்... இனியும் நடிக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது இயல்பான நடிப்பு.

மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

முதலில் ஒரு மலையாள விளம்பரம், அடுத்து பசங்க 2 என நடித்தவர், இப்போது மீண்டும் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நில் பட்டே சனட்டா

நில் பட்டே சனட்டா

இந்தியில் ஸ்வரா பாஸ்கர் நடித்த நில் பட்டே சனட்டா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

தனுஷ்

தனுஷ்

இந்தி படத்தை பிரபல இயக்குநர் நித்திஷ் திவாரியின் மனைவி அஸ்வினி இயக்கினார். இந்த படத்தை நித்திஷ் திவாரியுடன் சேர்ந்து தனுஷ் தயாரிப்பார் என்று கூறுகிறார்கள்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தமிழ் ரீமேக்கை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவார் என்று தெரிகிறது. 3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் படம் இது.

English summary
Actress Amala Paul has signed the Tamil remake of Nil Battey Sanatta.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil