நாங்களும் வாங்குவோம்ல.. த்ரிஷா, பார்த்திபனை தொடர்ந்து கோல்டன் விசாவை பெற்ற அமலா பால்!

சென்னை: ஐக்கிய அரபு அமீரகம் நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்துள்ளது.

தங்கத்தை தேடி ஓட வேண்டும் என சொல்வார்கள். நானும் தங்கத்தை பெற்று விட்டேன் என அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்த நாட்டு குடிமகளை போலவே அமலா பால் இனி நடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரக குடிமக்கள்

அமீரக குடிமக்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் திறமை வாய்ந்த வெளிநாட்டவர்களையும் சினிமா பிரபலங்களையும் குடிமக்களாக மாற்ற அந்நாட்டு அரசு கோல்டன் விசாவை தாராளமாக வழங்கி வருகிறது. 10 ஆண்டுகள் அந்த நாட்டின் குடிமக்களாக வாழ வழங்கப்படும் கோல்டன் விசாவை பெற பாலிவுட் நடிகர்கள், கேரள நடிகர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் மத்தியில் போட்டி எழுந்துள்ளது.

ஊர்வசி ரவுத்தேலா

ஊர்வசி ரவுத்தேலா

இந்தியாவிலேயே இளம் நடிகையான தனக்கு கோல்டன் விசா கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என சில மாதங்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் கொண்டார்.

மோகன்லால் மம்மூட்டி

மோகன்லால் மம்மூட்டி

தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களை குறிவைத்து இந்த கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டன. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

முதல் தமிழ் நடிகை

முதல் தமிழ் நடிகை

மலையாள நடிகர்களை தொடர்ந்து தமிழ் நடிகையான த்ரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்கிற பெருமை எனக்கு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் என கோல்டன் விசாவை பெற்ற புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கினார் த்ரிஷா.

முதல் தமிழ் நடிகர்

முதல் தமிழ் நடிகர்

நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகர் பார்த்திபனுக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகர் தான் என அறிந்ததில் அதிக மகிழ்ச்சி அடைந்தேன் என நடிகர் பார்த்திபனும் அந்த விசாவை பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்து மகிழ்ந்தார்.

அமலா பாலுக்கும் கோல்டன் விசா

அமலா பாலுக்கும் கோல்டன் விசா

இந்நிலையில், தற்போது நடிகை அமலா பாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. கேரளத்தை சேர்ந்த அமலா பால் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ஐக்கிய அமீரகம் வழங்கிய கோல்டன் விசா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

கோ ஃபார் கோல்ட்

கோ ஃபார் கோல்ட்

தங்கத்தை தேடி ஓட வேண்டும் என்பார்கள்.. நானும் ஓடினேன்.. எனக்கு கோல்டன் விசா கிடைத்து விட்டது. இந்த விசா எனக்கு கிடைக்க காரணமானவர்களுக்கு என் நன்றி என நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X