Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் அமலா... என்ன படம் தெரியுமா?
சென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா, மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் பொசு பொசுனு பார்ப்பவர் கண்படும் அளவுக்கு அழகு பதுமையாக இருப்பார்.
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்து தனது கொடியை பறக்கவிட்ட அமலா திருமணத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
சந்திரமுகியாக மிரட்டப்போகும் அனுஷ்கா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் பி வாசு விளக்கம்!
30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அமலா தமிழில் ரீ எண்ட்ரி ஆகி உள்ளார். இந்த தகவல் அமலா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மைதிலி என்னை காதலி
பரதநாட்டிய கலைஞரான அமலா டி ராஜேந்திரன் இயக்கிய மைதிலி என்னை காதலி திரைப்படத்தின் மூலம் கலைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படம் நீண்ட நாட்கள் திரையில் ஓடி ஹிட்டடித்தது.

ஹிட் படங்கள்
மைதிலி என்னை காதலி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கூட்டு புழுக்கள், வேதம் புதிது, ரஜினிகாந்துடன் வேலைக்காரன், கமலுடன் பேசும் படம், சத்யா, அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகை
80களில் முன்னணி நடிகையாக இருந்த அமலா ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், ரகுவரன், சிவக்குமார், பிரபு, மோகன் போன்ற முன்னணி நடிகைகளுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்தார். அமலா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் கற்பூர முல்லை திரைப்படமாகும் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

அமலா ரீ எண்ட்ரி
இந்நிலையில்தான், 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் கணம் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை அமலா தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அமலா, 6வருடங்களுக்கு முன் மனம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

ஷர்வானந்த் ஹீரோவாக
இந்த படத்தில் நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாகவும், ரீதுவர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். தயாரிப்பு பணிகளை எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றம் எஸ்.ஆர்.பிரபு மேற்கொள்கிறார்கள்.

ஷர்வானந்த்
நடிகர் ஷர்வானந்த் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்து நம் அனைவருக்கும் பரீச்சியமானவர். தற்போது இவர் மஹா சமுத்திரம் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.