Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணவனை கழட்டி விட்டு… புது காதலருடன் டேட்டிங் போன பிரபல நடிகை !
சென்னை : கணவரை விட்டுவிட்டு புது காதலரான பிரிட்டிஷ் நடிகருடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், ஆர்யாவுடன் மதராச பட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த எமி, விக்ரமுட ன் ஐ, தனுஷூடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அடேங்கப்பா..
பீஸ்ட்
லுக்..
ஜீனியஸ்
செல்வாவா
அல்லது
வேட்டையாடு
விளையாடு
ராகவனானு
தெரியலையே?

எமி ஜாக்சன்
தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த போதே ஹாலிவுட் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து, தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு லண்டனில் தனது காதலர் ஜார்ஜ் பனயோட்டோவுடன் செட்டிலானார். லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெயரை நீக்கினார்
இதையடுத்து, திடீரென எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜ் பனயோட்டோவின் புகைப்படத்தையும், அவரின் பெயரையும் நீக்கினார். இதனால், இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரபரப்பாக பரவியது. ஆனால், இது குறித்து எமியோ, ஜார்ஜோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரிட்டிஷ் நடிகருடன் காதல்,
இந்நிலையில், எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்து வருவதாகவும் ஹாலிவுட் வட்டாரத்தில் தகவல் காட்டுத்தீபோல பரவி வருகிறது. பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர், சன் ஆப் சாரோ, ரோமியோ ஜூலிட் , பில்லியனர் ரான்சம் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

மாடல் அழகியுடன் டேட்டிங்
இவர்கள் இருவரும் சர்வதேச திரைப்படவிழாவில் சந்தித்த போது நட்பு ஏற்பட்டு தற்போது அது டேட்டிங் வரை சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக், தென்னாப்பிரிக்க மாடல் தாமரா பிரான்செஸ்கோனிவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.