»   »  'டைம் இல்ல.. டைம் இல்ல...' - நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிய எமி ஜாக்சன்!

'டைம் இல்ல.. டைம் இல்ல...' - நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிய எமி ஜாக்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மணிரத்னம் பாய்ஸால் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது: சித்தார்த்- வீடியோ

பெங்களுர்: 'ஐ' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் '2.O' படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். அதோடு, தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் எமி, 'சூப்பர் கேர்ள்ஸ்' என்ற ஹாலிவுட் டிவி ஷோவிலும் நடித்து வருகிறார்.

மேலும், கன்னடத்தில் சிவராஜ்குமார் - சுதீப் நடிக்கும் 'தி வில்லன்' படத்தில் நாயகியாக நடிக்கும் எமி ஜாக்சன், 'குயின்' கன்னட ரீமேக்கான 'பட்டர்ஃப்ளை' படத்திலும் நடிக்கவிருந்தார்.

Amy jackson out from Queen kannada remake

குயின் ஹிந்தி படத்தில் கங்கனா ரணாவத் நடித்த ரோலில் கன்னட நடிகை பாருல் யாதவ் நடிக்க, லிசா ஹைடன் நடித்த கீ ரோலில் நடிக்க எமி ஜாக்சனிடம் பேசியிருந்தனர்.

ஆனால், இப்போது 'சூப்பர் கேர்ள்ஸ்' டிவி ஷோவில் அவர் திடீரென பிஸியாகி விட்டதால், 'பட்டர்ஃப்ளை' படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று வெளியேறி இருக்கிறார் எமிஜாக்சன்.

'மதராசப் பட்டினம்' படத்தில் நடிக்க லண்டனிலிருந்து வந்த எமி ஜாக்சன், விஜய், விக்ரம், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். படங்களுக்கு கால்ஷீட் தரமுடியாத அளவுக்கு இப்போது பிஸி!

English summary
Actress Amy Jackson is continuously starring with leading actors. She is now out of the 'Butterfly remake of the film 'Queen', which she is going to cast.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil