»   »  'புண்ணான' அஞ்சலி!

'புண்ணான' அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil
Click here for more images

கற்றது தமிழ் படத்தில், விபச்சார விடுதியில் சிக்கி, காமுகர்களிடம் அடி வாங்கும் காட்சியின்போது உண்மையிலேய முதுகில் அடி விழுந்ததால் முதுகு புண்ணாகி விட்டதாம். ஆனால் எல்லோரும் நடிப்பை பாராட்டுவதால் வலி மறந்து சந்தோஷமாக உள்ளதாம் பட நாயகி அஞ்சலிக்கு.

மலையாளத்திலிருந்து வத வதவென நாயகிகள் வந்து இறங்கி வரும் நிலையில் ஒரு மாற்றமாக, தெலுங்கிலிருந்து வந்துள்ள தேவதைதான் அஞ்சலி.

கற்றது தமிழ் தான் இவருக்கு முதல் தமிழ்ப் படம். ஆனால் முன்பே ஒரு தெலுங்குப் படத்தில் (போட்டோ) தலை காட்டி விட்டவர் அஞ்சலி. கற்றது தமிழ் பட இயக்குநர் ராமின் அலுவலகம் உள்ள பகுதியில்தான் அஞ்சலியின் வீடும் உள்ளது.

அஞ்சலியின் இயல்பான தோற்றத்தைப் பார்த்துத்தான் அவரை தனது படத்தின் நாயகியாக்கினாராம் ராம்.

படத்தில் அஞ்சலிக்கு முதல் காட்சியே விவகாரமான காட்சி. அதாவது, விபச்சார விடுதியில் அஞ்சலியை அவரது தாய்மாமன் விற்று விடுவார். விபச்சார விடுதியில் அஞ்சலியைப் பார்க்கும் சிலர் அவருக்கு விலை பேசி கூட்டிச் செல்வார்கள்.

அங்கு அவர்களுக்கு உடன்பட அஞ்சலி மறுப்பார். இதனால் அவரை நிர்வாணப்படுத்தி, குப்புறப் படுக்க வைத்து முதுகில் சரமாரியாக அடிப்பார்கள். இந்தக் காட்சியை ஆபாசமாக இல்லாமல், அனுதாபம் வரக் கூடிய வகையில் படமாக்குவேன் என்று ராம் சொல்லியதால், தயக்கமே இல்லாமல் நடித்தாராம் அஞ்சலி.

படத்தில் அஞ்சலி நடித்த முதல் காட்சியும் இதுதானாம். இந்தக் காட்சியின் போது நிஜமாகவே முதுகில் அடி விழுந்ததால் வலியில் கதறி அழுதாதாரம். இதனால் காட்சி படு தத்ரூபமாக வந்து விட்டது.

ஆனால் வாங்கிய அடியின் வலி இன்னும் கூட போகவில்லையாம். இருந்தாலும், சுஹாசினி உள்ளிட்ட பலரும் அஞ்சலியின் நடிப்பைப் பாராட்டிப் பேசியதால் வலி மறந்து சந்தோஷமாக உள்ளாராம் அஞ்சலி.

மாடலிங்குக்காக முன்பு சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தபோது, சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஞ்சலிக்கு வந்துள்ளது. ஆனால் அதற்குள் தெலுங்குப் படம் ஒன்று வந்ததால் அங்கு போய் விட்டார்.

போட்டோ என்ற அந்த தெலுங்குப் படத்தில் நடித்த பின்னர் பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் வந்தததுதான் கற்றது தமிழ்.

இப்போது கன்னடத்தில் ஒரு படம் தேடி வந்துள்ளதாம். தமிழிலும் 2 படங்கள் வந்திருக்கிறதாம். பார்த்து பார்த்து செய்யவுள்ளாராம். கண்ணை உறுத்தாத கிளாமருக்கு அஞ்சலியிடம் நோ ஆட்சேபனையாம்.

கற்றது தமிழில் அஞ்சலி சொந்தக் குரலில்தான் பேசியுள்ளார். தொடர்ந்து சொந்தக் குரலிலேயே பேசத் திட்டமிட்டுள்ளாராம். நல்ல குரள் வளம் கொண்ட நீங்கள் பாடலாமே என்றும் சிலர் தூபம் போட்டுள்ளனராம்.

இதனால் வாய்ப்பு கிடைத்தால் வாசித்து விடலாம் என்ற ஆர்வத்தில் அஞ்சலியும் இருக்கிறார். அதுக்காக யாரும் பாட்டுக் கச்சேரியில் வாசிக்கக் கூப்பிட்டுடாதீங்கோ!

Read more about: acting, anjali, director, jeeva, katrathu tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil