For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீச்சல் உடையில் கதறவிடும் விஜய் டிவி டிடி.. கேப்ஷன் வேற லெவல்.. அசந்து போகும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி வெளியிட்டிருக்கும் பிகினி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அசந்துப் போயுள்ளனர்.

  விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. எந்த நிகழ்ச்சி என்றாலும் கலகலப்பாகவும் எனர்ஜிட்டிக்காகவும் கொண்டு செல்லக் கூடியவர்.

  துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித்

  சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

  கருத்து வேறுபாடு

  கருத்து வேறுபாடு

  சினிமாவிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் டிடி. டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  தொழில் அதிபருடன் காதல்?

  தொழில் அதிபருடன் காதல்?

  இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டனர். அதன்பிறகு தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் டிடி. இதனிடையே டிடி கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது.

  மாலத்தீவில் ஜாலி

  மாலத்தீவில் ஜாலி

  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.

  பிகினியில் ஆட்டம்

  பிகினியில் ஆட்டம்


  அங்கிருந்து கலக்கலான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டிடி மாலத்தீவு கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  பச்சை நிற பிகினியில்

  பச்சை நிற பிகினியில் இருந்த போதும் அப்படியே அப்பட்டமாக காட்டாமால் வுட்டன் ட்ரேவை வைத்து தனது பிகினி அழகை மறைக்கிறார் டிடி. குட் பை நண்பா என்ற பாடல் ஒலிக்க கண்களில் கூலர்ஸுடன் கதறவிட்டுள்ளார் டிடி.

  ரொம்ப யோசிச்சேன்

  ரொம்ப யோசிச்சேன்

  மேலும் இந்த வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் வேற லெவலில் உள்ளது. அவர் பதிவிட்டிருப்பதாவது, இந்த ஸ்விம் சூட் வீடியோவை போஸ்ட் செய்தால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று ரொம்ப யோசிச்சேன்.

  விரும்புவதை செய்ய விடுங்கள்

  விரும்புவதை செய்ய விடுங்கள்

  அப்புறம் நான் உணர்ந்தேன், இந்த இடத்திற்கு வர 23 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன், இந்த ஷேப்பை பெற பல மணி நேரங்கள் வொர்க்கவுட் செய்திருக்கிறேன். அதனால் இதுதான் என் சந்தோஷம். நான் என்ன விரும்புகிறேனோ அதை செய்ய விடுங்கள் என குறிப்பபிட்டுள்ளார்.

  அசந்து போன நெட்டிசன்ஸ்

  மேலும் பின்குறிப்பு என நீச்சல் வராது அதனால் நடக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். டிடியின் இந்த வீடியோவையும் கேப்ஷனையும் பார்த்து அசந்து போயுள்ளனர் நெட்டிசன்கள். உங்களின் இந்த கேப்ஷனுக்கே லைக்ஸ்களை அள்ளிக் கொட்டலாம் என ஹார்ட்டின்களை குவித்துள்ளனர்.

  விமர்சிக்க வருவார்கள்

  மேலும் உங்களுக்கு எது சந்தோஷமோ அதை செய்யுங்கள் எதற்காகவும் யாருக்காகவும் கவலைப்படாதீர்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். நமக்கு பிடித்ததை செய்ய யோசிக்கவே கூடாது, மக்கள் எப்போதும் நம்மை விமர்சிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் நம் சிரிப்புக்கு பின்னால் உள்ள போராட்டங்கள் அவர்களுக்கு தெரியாது என்று பதிவிட்டும் டிடியை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

  இப்படி ஏமாத்திட்டீங்களே..

  அதேநேரத்தில் பலரும் முழுவதும் காட்டாமல் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே என்றும் புலம்பி வருகின்றனர். டிடியின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருவதோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.

  English summary
  Anchor DD Bikini Video goes viral on social media. DD wears Bikini in Maldives beach.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X