மேஜிக்கல் பியூட்டின்னு சொல்வாங்களே, அது நீங்கதான்..' ஹீரோயின் போட்டோ பார்த்து ஓவராக புகழும் ஃபேன்ஸ்!

By

சென்னை: 'கொரோனாவுக்கு கூட பயப்படலை, உங்க அழகை நினைச்சுதான் பயப்படறேன்' என்று ஹீரோயினின் போட்டோவை கண்டு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம், அனேகன். இதில் நாயகியாக நடித்தவர், அமைரா தஸ்துர்.

இதில் சிறப்பாக நடித்திருந்த இவருக்கு, பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு இந்தியில் கவனம் செலுத்தினார்.

பைனான்ஸ் பிரச்னை

பைனான்ஸ் பிரச்னை

ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, காலா காண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால் வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம்

இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். இதைப் பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

இதற்கு ரசிகள் ரசனையான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அழகாகிட்டே போவதை நிறுத்துங்க...என்று சிலர் ஏக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போட்டோவை பார்த்துக்கிட்டே இருந்தேன், என்னமோ வைரஸ் அட்டாக் மாதிரி ஒரு ஃபிலீங் என்று சிலரும் 'நீங்க அழகுன்னு சொல்றது, சின்ன வார்த்தைதான்' என்று சில ரசிகர்களும் கூறியுள்ளனர்.

மேஜிக்கல் பியூட்டி

'ஆஹா... எரியும் சுடர் மாதிரி அவ்வளவு அழகா இருக்கீங்க? என்று ஒருவர் வர்ணித்துள்ளார். கொரோனாவுக்கு கூட நான் பயப்படலை, உங்க போட்டோவுக்குத்தான் பயப்படறேன் என்று சிலர் தெரிவித்துள்ளனர். மேஜிக்கல் பியூட்டின்னு சொல்வாங்களே, அது நீங்கதான்... உங்களுக்கு என்ன டிரெஸ் போட்டாலும் அருமையா இருக்கு என்று சில ரசிகர்கள் ஓவராக புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இளவரசியேதான்

இளவரசியேதான்

'உங்களைப் பார்த்தா அந்த செண்பகவல்லி (அனேகனின் ஒரு கேரக்டர்) கேரக்டர்தான் முகத்துக்கு முன்னால வருது என்று சிலரும், 'நீங்க இளவரசியேதான்...அதுல சந்தேகமே இல்லை. இந்த புகைப்படங்கள்ல இருந்து கண்ணை வெளியே எடுக்க முடியலை என்று சிலர் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X