»   »  ஜெய்... எப்போதும் என்னோடு இரு!- அஞ்சலி

ஜெய்... எப்போதும் என்னோடு இரு!- அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சலியின் காதல்கள் பற்றி ஆயிரம் கதைகள். தெலுங்கில் ஒரு மணவாடுவுடன் செட்டிலாகிவிட்டார் என்றார்கள். இல்லையில்லை... அவருக்கு அமெரிக்காவில் காதலன் இருக்கிறார் என்றார்கள்.

சில மாதங்களுக்கு முன் அவர் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்.

நடிப்பில் பிஸி

நடிப்பில் பிஸி

ஆனால் அவரோ இப்போது தமிழில் பிஸியான நடிகையாகிவிட்டார். இறைவியில் ஏகத்துக்கும் நல்ல பெயர் அஞ்சலிக்கு. தொடர்ந்து பல படங்களுக்கு அட்வான்ஸை வாங்கிப் போட்டு வருகிறார்.

ஜெய்யுடன்

ஜெய்யுடன்

எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக ஒரு பெரிய வதந்தி ரவுண்டடித்தது. புகழ் படம் வெளியானபோது பேசிய ஜெய், நானும் அஞ்சலியும் மீண்டும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளோம். இந்த உறவு காதலில் முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பேட்டியளித்தார்.

எப்போதும் என்னுடன் இரு

இப்போது அதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார் அஞ்சலி. சமீபத்தில் ட்விட்டர் வழியாக அஞ்சலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஜெய். அதற்குப் பதிலளித்த அஞ்சலி, நன்றி ஜெய். இதுதான் என்னுடைய சிறப்பான பிறந்தநாள். என்னுடன் எப்போதும் இரு என்று பதிலளித்துள்ளார்.

புதுப் படம்

புதுப் படம்

இதற்கிடையில் இருவரும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்கள். இது ஒரு பேய்ப் படம். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்குகிறார்.

English summary
Actress Anjali has almost confirmed her love affair with actor Jai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil