»   »  தெலுங்கில் குத்தாட்டம் போட ரூ. 1 கோடி கேட்ட அஞ்சலி

தெலுங்கில் குத்தாட்டம் போட ரூ. 1 கோடி கேட்ட அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஆந்திராவில் அவர் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று மாயமானார்.அஞ்சலி அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் அவர் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிஸியான அஞ்சலி

பிஸியான அஞ்சலி

சித்தி பிரச்சனையும், திருமண கிசுகிசுவும் ஓய்ந்து தற்போது நடிகை அஞ்சலி முழுவீச்சில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் ரவியுடன் "அப்பாடக்கர்", விமலுடன் "மாப்ளசிங்கம்" ஆகிய தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

கூடுதல் கவர்ச்சி

கூடுதல் கவர்ச்சி

முன்பை விட கவர்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கிறார் அஞ்சலி. குடும்ப குத்துவிளக்காக நடித்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கவர்ச்சியில் கலக்கினார். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு படலுக்கு குத்தாட்டம் ஆடினார்.

தெலுங்கில் குத்து

தெலுங்கில் குத்து

இந்நிலையில் தெலுங்கில் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஒன்றில் நடனம் ஆட படக்குழுவினர் அஞ்சலியை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ ஒரு விரலை காட்டி சம்பளம் கேட்டதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தமான்னாவை விடவா?

தமான்னாவை விடவா?

அல்லுருசீனு என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டம் ஆட நடிகை தமன்னாவுக்கே ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்த நிலையில், அஞ்சலிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க படக்குழுவினர் மறுத்துவருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அஞ்சலியோ ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், ஆடுகிறேன். முடியாது என்றால் வேறு நடிகையை பாருங்கள்'' என்று அவர் கூறியிருக்கிறார்.

சாதனையை முறியடிப்பாரா

சாதனையை முறியடிப்பாரா

ஆனால் அஞ்சலிக்கு தற்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஒருவேளை படக்குழுவினர் ஒருகோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டால் அவர் தமன்னாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பதை அஞ்சலி படிக்காமலா இருந்திருப்பார்?

English summary
Tollywood commercial movies have now caught a regular custom of stuffing themselves with the hot item songs danced by highly demanded contemporary actresses. The makers are offering good remuneration to hire even famous heroines for the item numbers that claim huge attention in the movies of star heroes.
Please Wait while comments are loading...