»   »  அங்கிதா.. அங்கிதா...

அங்கிதா.. அங்கிதா...

Subscribe to Oneindia Tamil

லண்டன் படத்தின் மூலம் அங்கிதாவை தமிழுக்கு இழுத்து வரும் சுந்தர்.சி அப்படியே அவருக்கு தனது அடுத்த படத்திலும் ஹீரோயின்சான்ஸ் கொடுத்துவிட்டார்.

தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின் அங்கிதா. நடிப்போடு, டான்ஸ், கவர்ச்சி என ஆல்-ரவுண்ட் கலக்கல் புரிந்து வரும் ஒருஅழகிய ராட்சசி. சமீபத்தில் தெலுங்கு ஹீரோ ஒருவரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்குமுயன்றவர்.

இந்தியில் சில படங்களில் தலை காட்டினாலும் அங்கு நிலைக்க முடியாது என்பதால் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தெலுங்கில் ஓல்டு மற்றும் இளம் ஹீரோக்கள் வரம்பு மீறுவது மிகவும் ஜாஸ்தி ஆகிவிட்டதால் தமிழுக்கு ஓடி வரும் ஹீரோன்கள்வரிசையில் இப்போது அங்கிதாவும் நிற்கிறார்.

கிரி படத்தைத் தொடர்ந்து பிரஷாந்தை வைத்து சுந்தர்.சி இயக்கி வரும் லண்டன் படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்கிறார்அங்கிதா.

இந்தப் படத்தை லண்டனைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபரான சுபா சந்தீப் தயாரிக்கிறார். வித்யாசாகரின் இசையில் வந்துள்ளஅட்டகாச டியூன்களுக்கு அங்கிதா போட்டுள்ள துள்ளல் ஆட்டம் கலக்கலாக வந்திருக்கிறது என்கிறார் சுந்தர்.

இந்தப் படம் முடிவுறும் தருவாயில் இருக்க, தகதிமிதா என்ற அடுத்த படத்துக்கும் பூஜை போட்டு சூட்டிங்கையும் தொடங்கி விட்டார்சுந்தர்.சி. இதைத் தயாரிப்பது ஏகேஆர் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம். இதில் ஹீரோவாக யுவகிருஷ்ணா என்ற ஆந்திர வாலிபர்அறிமுகமாகிறார்.

தகதிமிதா படத்தை நீண்ட காலத்துக்கே முன்பே எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் சுந்தர். இவரது இமாலய வெற்றிப் படமான உள்ளத்தைஅள்ளித்தா ஹீரோயின் ரம்பாவின் கஸின் தான் இந்த யுவன் கிருஷ்ணா. ரம்பாவின் செம ரெக்கமண்டேசனுடன் இந்த ஹீரோ வாய்ப்பைப்பெற்றுள்ளார்.


படத்தின் ஹீரோ-ஹீரோயின் இருவருக்கும் இணையான ரோல் விவேக்-தேஜாஸ்ரீ ஆகியோருக்கும் தரப்பட்டுள்ளதாம்.

பறவை முனியம்மா, ஷகீலா உள்ளிட்டோர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணம் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ளது. படத்துக்கு இசை இமான். பாடல் காட்சிகளுக்காக ஆஸ்திரேலியா பக்கம் போகப் போகிறார்களாம்.

உள்ளத்தை அள்ளித் தா மாதிரி இதுவும் மிக கலகலப்பான படமாம்.

லண்டன், தகதிமிதா ஆகிய இரு படங்களிலும் சுந்தரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சிங்கிள் பீஸ் உள்ளிட்ட உடைகளில் நல்லதாராளம் காட்டி வருகிறார் அங்கிதா.

இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு மீண்டும் தனது மனைவி குஷ்புவின் தயாரிப்பில் அடுத்த படத்தைத் இயக்கப் போகிறார் சுந்தர்.

அதிலும் அங்கிதா தான் ஹீரோயினா சார்??!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil