»   »  நடிகை அனு ஹாஸன் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளாரா?: தீயா பரவிய போட்டோ

நடிகை அனு ஹாஸன் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளாரா?: தீயா பரவிய போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனு ஹாஸன் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் மகளான அனு ஹாஸன் கிரஹாம் ஜேயை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்திரா படம் மூலம் ஹீரோயினான அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Anu Hasan hospitalised?

என்.டி. நந்தா இயக்கத்தில் அனு நடித்து வரும் படம் வல்லதேசம். அந்த படத்தில் அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற காட்சி உள்ளது.

அந்த காட்சியில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. புகைப்படத்தை பார்த்தவர்கள் அனு நிஜத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளனர்.

அது படத்திற்காக எடுத்த புகைப்படமப்பா அனு நலமாக உள்ளார்.

English summary
Picture of actress Anu Hasan in hospital bed is doing rounds on social media. Anu is doing just fine and the picture was taken from her upcoming movie scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil