அருந்ததி 2 ஆரம்பமா? திடீரென பொம்மாயி மோடுக்கு மாறிய அனுஷ்கா.. எகிறிய எதிர்பார்ப்பு!

சென்னை: இப்பவும் டிவியில் அருந்ததி படம் போட்டால் பொம்மாயி என வில்லன் நடிகர் சோனு சூட் சொல்லும் போதே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும்.

அந்த அளவுக்கு தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அருந்ததி.
இந்நிலையில், அருந்ததி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு நடிகை அனுஷ்கா பண்ண விஷயம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆளே காணாமல் போன அனுஷ்கா

ஆளே காணாமல் போன அனுஷ்கா

பாகுபலி 2 படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய நடிகையாக ஜொலிக்கப் போகிறார் அனுஷ்கா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அனுஷ்கா கடந்த சில காலமாக ஆள் அட்ரஸே தெரியாமல் போய் விட்டார். கடைசியாக மாதவன் உடன் அவர் இணைந்து நடித்த சைலன்ஸ் படம் சைலன்ட்டாக வந்ததே தெரியாமல் படு தோல்வியை சந்தித்தது.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை இஷ்டத்துக்கு அதிகரித்த அனுஷ்காவால் மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக முடியாமல் போனது தான் பிரச்சனை என்றனர். ஆனால், அதன் பிறகும் ருத்ரமாதேவி, பாகமதி, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் அனுஷ்கா.

பிரபாஸ் உடன் திருமணம்

பிரபாஸ் உடன் திருமணம்

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் சீக்கிரமே திருமணம் என கிசுகிசுக்கப்பட்டன. அதன் பிறகு இருவரும் அதனை மறுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகப் போகிறது என வதந்திகள் வலம் வருகின்றன.

அருந்ததி

அருந்ததி

கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு தான் ராணி கதாபாத்திரங்களில் அனுஷ்கா கச்சிதமாக பொருந்தி நடித்து வந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் புரொபைல் பிக்சர்களை திடீரென அருந்ததி படத்தின் புகைப்படத்தை மாற்றி உள்ளார் அனுஷ்கா.

அருந்ததி 2 வருதா

அருந்ததி 2 வருதா

அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அருந்ததி படத்தின் இரண்டாம் பாகம் வரப் போகிறதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மீண்டும் அனுஷ்காவின் பட அறிவிப்பை கேட்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அருந்ததி படம் 4K தொழில்நுட்பத்தில் வருவதை முன்னிட்டுத் தான் இந்த புரொபைல் பிக்சர் மாற்றம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சந்திரமுகி 2வில் ஹீரோயினா

சந்திரமுகி 2வில் ஹீரோயினா

முன்னதாக இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் அனுஷ்கா தான் சந்திரமுகியாக நடித்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இதுவரை சந்திரமுகி 2வில் யார் ஹீரோயின் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X