»   »  இ.இ.க்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க அமெரிக்கா பறந்த அனுஷ்கா

இ.இ.க்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க அமெரிக்கா பறந்த அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை பாகுபலி 2 படத்திற்காக குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக பூசினாற் போன்று இருந்த அனுஷ்கா கண்டமேனிக்கு சாப்பிட்டு உடல் எடையை கூட்டினார். யோகா டீச்சரான அவர் உடல் எடையை அதிகரிக்க யோகா, ஜிம் ஆகியவற்றை கைவிட்டார்.

விளைவு படத்திற்கு ஏற்றது போன்று சூப்பராக குண்டானார்.

அடடே

அடடே

படத்திற்காக குண்டாகி புஸ்ஸென்று ஆகிய அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அனுஷ்கா தான் லேடி விக்ரம் என்றார்கள்.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்தில் நடிக்க உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அனுஷ்கா. அதுவும் விரைவாக குறைக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

உடல் எடையை விரைவில் குறைக்க அனுஷ்கா அமெரிக்கா சென்றுள்ளாராம். யோகா, உடற்பயிற்சி செய்து இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பிய அவர் கால அவகாசம் இல்லாததால் அமெரிக்கா பறந்துள்ளாராம்.

ருத்ரமா தேவி

ருத்ரமா தேவி

பாகுபலி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அடுத்து வெளியான ருத்ரமா தேவியும் ஹிட். இப்படி அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சந்தோஷத்தில் உள்ளார் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அவர் 20 கிலோவுக்கு மேல் தனது உடல் எடையை கூட்டினார். அதே படத்தில் அவர் உடல் மெலிந்தும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Anushka has gone to the USA to reduce her extra weight for Baahubali 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil