»   »  அடுத்ததும் சரித்திர படம்… இப்போதைக்கு நோ மேரேஜ்- அனுஷ்கா முடிவு

அடுத்ததும் சரித்திர படம்… இப்போதைக்கு நோ மேரேஜ்- அனுஷ்கா முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுஷ்காவுக்கு திருமணம் என்று கிளப்பி விட்டு கிளப்பி விட்டு கடைசிவரை ஒன்றுமே நடக்காததால் மீடியாக்களே ஓய்ந்துவிட்டன. ஆனால் அனுஷ்காவோ அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார்.

நயனும் த்ரிஷாவும் பேய் பக்கம் செல்ல, அனுஷ்கா சரித்திர பாதையை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.

இப்போது பாகுபலி 2 வில் பிஸியாக இருக்கும் அனுஷ்கா அடுத்தும் நடிக்கவிருப்பது ஒரு சரித்திர படம் தான். படத்தின் பெயர் பாகுமதி.

Anushka is busy in historical movies

‘பில்லா ஜமீந்தார்' என்ற படத்தை இயக்கிய அஷோக் தான் இந்த படத்தின் இயக்குநர். இதற்காக ஒரு ஸ்பெஷல் கெட்டப்புக்கு மாறவிருக்கும் அனுஷ்கா அதனாலேயே இந்த படம் முடியும்வரை அடுத்த படத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

தான் பெரிதும் எதிர்பார்த்த ருத்ரம்மாதேவி சரியாக போகாததால் இந்தப் படத்தின் கதையில் முழு கவனம் செலுத்துகிறார் அனுஷ்கா. அருந்ததி போல தன் கேரியரின் பெஸ்ட்களில் ஒன்றாக பாகுமதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் அனுஷ்கா.

Read more about: anushka, அனுஷ்கா
English summary
After many marriage rumours, still Anushka is busy in Telugu Cinema. Now she has accepted another historical movie titled Bahumathi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil