»   »  மீண்டும் ராணியாகப் போகிறார் அனுஷ்கா - பாகுபலி 2க்கு பின்னர் பகமதி ராணி வேடமாம்!

மீண்டும் ராணியாகப் போகிறார் அனுஷ்கா - பாகுபலி 2க்கு பின்னர் பகமதி ராணி வேடமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்காவிற்கு பெருமளவில் சரித்திர கால ராணி வேடங்களே குவிந்து வருகின்ற நிலையில் தற்போது பகமதி ராணியாகவும் அனுஷ்கா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருந்ததி படத்தில் தொடங்கிய அனுஷ்காவின் ஆதிக்கம். அருந்ததி படத்தில் அவர் ஏற்று நடித்த அருந்ததி கதாபாத்திரத்தை இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறச் செய்தது.

Anushka may be queen again

அதையடுத்து பாகுபலியில் ராணியாக நடித்த அனுஷ்கா ருத்ரமாதேவியிலும் ராணியாக கலக்கினார். அவரைத்தேடி வரும் ராணி வேடங்கள் குறைவதாக இல்லை.

தற்போது சரித்திர பின்னணி கொண்ட பகமதி ராணியாக இவரை வைத்து படம் எடுக்க தெலுங்கு இளம் இயக்குனர் ஜி.அசோக் முன் வந்திருக்கிறார்.

Anushka may be queen again

இதற்கான கதையை அனுஷ்காவிடம் அவர் சொல்லி நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையும் அதில் வரும் ராணி பாத்திரமும் பிடித்துவிட்டதால் அனுஷ்கா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது பாகுபலி 2 இல் நடிக்க இருப்பதால் உடனே இந்த படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. பாகுபலி படப்பிடிப்பு முடிந்த பிறகு மற்றொரு ராணியாக நடிக்க அனுஷ்கா தயார் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anushka may act as Bakumathi queen after bahubali 2 shoot finished.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil