»   »  இஞ்சி இடுப்பழகிக்காக ஏற்றிய எடையை பாகுபலிக்காக குறைக்கும் அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகிக்காக ஏற்றிய எடையை பாகுபலிக்காக குறைக்கும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ உடை எடையை அதிகரித்து நடித்த அனுஷ்கா தற்போது பாகுபலி படத்திற்காக தீவிரமான எடை குறைப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இதற்காக விரைவில் அமெரிக்கா சென்று எடை குறைப்பு சிகிச்சையை அனுஷ்கா எடுத்துக் கொள்ளவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Anushka Reduce her Weight for Baahubali 2

பாகுபலி படத்தின் 2 வது பாகம் நவம்பரில் தொடங்கப்படவிருக்கிறது. முதல் பாகத்தில் அனுஷ்காவை வயதான தோற்றத்தில் காட்டி ஏமாற்றிய ராஜமௌலி இந்தப் பாகத்தில் அதற்குப் பரிகாரமாக அனுஷ்காவை இளமையாக காட்டவிருக்கிறார்.

இந்தப் பாகத்தில் அனுஷ்கா இளவரசி மற்றும் அரசியாக தோன்றவிருக்கிறார். மேலும் பிரபாஸ் - அனுஷ்கா இடையிலான காதல் காட்சிகளும் இந்தப் பாகத்தில் அதிகம் வரவிருக்கிறதாம்.

எனவே இதற்குத் தகுந்தவாறு தனது உடல் எடையை குறைத்து அழகாக மாற வேண்டிய கட்டாயத்தில் அனுஷ்கா இருக்கிறார். இதற்காக ஏற்றிய எடையை குறைத்து விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுஷ்கா திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்த முயற்சியை ருத்ரமாதேவி பட வெளியீடு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளுக்காக தள்ளி வைத்த அனுஷ்கா தற்போது விரைவில் அமேரிக்கா பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

English summary
Actress Anushka reduce her Weight for Baahubali 2. Sources Said "Anushka has to lose some weight before she joins the sets of 'Baahubali 2'. She will undergo a weight loss therapy in US". Baahubali 2 Shooting Started Next Month, Anushka has a Very Important role in the second Part.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil